Tuesday, May 24, 2016

புறநானூறு - 108. பறம்பும் பாரியும்!

புறநானூறு - 108. பறம்பும் பாரியும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே; அறம்பூண்டு

பாரியும் பரிசிலர் இரப்பின்
‘வாரேன்’ என்னான் அவர்வரை யன்னே.


பொருளுரை:

குறிஞ்சிப்பெண் ஒருத்தி அடுப்பில் செருகிய வற்றிய கொள்ளிக்கட்டை சந்தனமாகையால்,
அதன் அழகிய புகை அருகில் உள்ள மலைச்சரிவில் இருக்கும்
வேங்கை மரத்தின் பூக்களுடைய கிளைகளுக்கெல்லாம் பரவுகிறது.

அத்தகையது பறம்பு நாடு.
தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்குப் பாரி பறம்பு நாட்டையே பரிசாக அளித்ததால்
அது இப்பொழுது அவர்க்கு உரியதாயிற்று.

பரிசிலர் பாடி வந்து, “உன்னையே பரிசாக எமக்குத் தர வேண்டுமென்று” கேட்டால்,
அறத்தை மேற்கொண்டு,
பாரி அவரிடம் வரமாட்டேன் என்று கூற மாட்டான்.


Description:(A Song About Vel Paari)

As the last fire wood which was put in the oven was sandal wood
its sweet smell mixed with the aroma of the vengai flowers spread .

Paari was a patron who felt happy on giving to those who come praising his Parambu hill.
If some one says that he is the gift they need, he will give himself as a gift at that moment itself.

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/10/108.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html


No comments: