Sunday, December 7, 2014

முகத்திற்கு இயற்கை மருத்துவம்

பருக்களுக்கான லேசர் சிகிச்சைக்கு பதில்
* மஞ்சள் துாள், எலுமிச்சை சாறு கலந்து, பருக்கள் மீது தடவி, 15 நிமிடத்திற்கு பின், கழுவி விடலாம்.
* முல்தானிமட்டியில் பன்னீர் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் கழுவ, பருக்கள் மட்டுமல்ல; அழுக்கும் போயே போய் விடும்.
பிளீச்சிங் செய்வதற்கு பதில்
கொஞ்சம் சர்க்கரை, சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய், சில சொட்டுகள் தேன் கலந்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து சிறிது நேரத்திற்கு கழுவி விடலாம்.
பேஷியல் செய்து கொள்வதற்கு பதில்
கடலை மாவு, மஞ்சள் துாள், எலுமிச்சை சாறு, பாலாடை முதலியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவினால், முகம், ‘பளீச்’ என்றாகி விடும்.

பொடுகு நீங்க லோஷன் போட்டு ஊற வைத்து சிகிச்சை செய்வதற்கு பதில்
* வெந்தயம் ஊற வைத்து அரைத்து தலையில், ‘பேக்’ போட்டு அலசி விடலாம்.
* தயிருடன் வெள்ளை மிளகு துாள் கலந்து முடிக் கால்களில் படும்படி ‘மசாஜ்’ செய்து அலசி விடலாம்.

கிருமிநாசினியாகும் வேப்பிலை
கரும்புள்ளிகளை நீக்கும் துளசி
இயற்கை சோப் - கடலை மாவு / கொண்டைக்கடலை / பச்சைப் பயறு மாவு
தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்
தொற்றுகளைக் குணமாக்கும் குங்குமப்பூ
இயற்கை மாய்ஸ்சரைசர் - தயிர்
சருமக் குளிர்ச்சிக்கு சந்தனம்
பளபளப்பான சருமத்திற்குத் தேன்
வயதாவதைத் தடுக்கும் கற்றாழை
க்ளென்சராக செயல்படும் நெல்லி

http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=103694

No comments: