Saturday, December 6, 2014

சிறுநீர் நோய் பற்றிய தகவல்கள்

சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி. நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறி. காச நோய்க்கான மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு காவி நிறத்தில் வெளியேறும். பால் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது யானைக்கால் நோயின் அடையாளமாக இருக்கலாம். சிறுநீரகத்தில் தொற்று இருப்பவர்களுக்கு சுண்ணாம்பு நீர் போல வெளியேறும். மரபியல்ரீதியான குறைபாடுகள் இருப்பவர்களின் சிறுநீரை வெயிலில் வைத்தால் பழுப்பு நிறமாகிவிடும். சிறுநீர் துர்நாற்றத்துடன் இருப்பது நீரிழிவு, சிறுநீரகத்தில் நோய்த்தொற்று போன்ற குறைபாடுகளின் அடையாளமே. சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வெளியேறு வது ஆபத்தானது என்பதை விளக்க வேண்டியதில்லை


http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3078&cat=500

சிறுநீர கல்லை நிக்கும் வழிகள்:
http://senthilvayal.com/2015/01/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE/

Thursday, December 4, 2014

ஈரல்க்கான கை வைத்தியம்

டுதொடா செடியின் ஆறு அல்லது ஏழு இலைகள் எடுத்துக்கொண்டு, இரண்டு குவளைத் தண்ணீர்விட்டு, கால் குவளையாக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி இலைக்கஷாயம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆடுதொடா இலைக் கஷாயத்தில் பாகு வெல்லம் சேர்த்து ஜீரா காய்ச்சுவதுபோல் பாகுபதத்தில் காய்ச்சிக் கொள்ளுங்கள். இதோடு கால் பங்கு தேன் கலந்து புட்டியில் அடைத்துவைத்துக்கொள்ளுங்கள். இந்த சிரப் ஈரலுக்கு வலுகொடுத்து ரத்தத் தட்டுகளை உயர்த்தும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த நிலையிலோ, நாள்பட்ட ஈரல் நோய்களிலோ புற்றுநோய் சிகிச்சையின்போதோ, மாதவிடாய் சமய அதிக ரத்தப்போக்கின்போதோ ரத்தத் தட்டுகள் குறையும். அப்போது இந்த ஆடுதொடா டானிக் ரத்தத் தட்டுகளை உயர்த்தி உடலுக்குக் கேடயமாக இருக்கும்.
எந்தவித ரசாயனக் கலப்பும் இல்லாமல் செய்வதால் குறைந்த நாட்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தயாரித்துவைத்துக்கொள்ளவும். இந்த ஆடு தொடா சிரப், சளி மற்றும் இருமலையும்  போக்குவது கூடுதல் பயன்!