`நீர்க் காய்கறியைக் கூட்டாக வைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும், முற்றிய காயைப் பொரியலாகச் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக்கரைசலில் வேகவிடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். `புளியில் வேகவைத்தால் அதன் புரதச்சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை. நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்டமின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்கிறது தேசிய உணவியல் கழகம்.
அதாவது, மழலைப் பேத்திக்குக் கஞ்சி; வளரும் பிள்ளைக்குப் பச்சரிசி; வீட்டில் உள்ள பெரியோருக்குக் கைக்குத்தல் புழுங்கல்; பாட்டிக்கு அவல்; மாலைச் சிற்றுண்டிக்கு பொரி; இரவில் அரிசிக் கஞ்சி!
http://www.vikatan.com/news/health/76002-is-white-rice-healthy.art
மிதவெப்பம் - கத்திரி, வெண்டை, கொத்தவரை, அவரை, முருங்கை, சுண்டை, பாகல்.
நீர் - பீர்க்கன், சுரை, புடலை, பரங்கி, பூசணி, முள்ளங்கி, பாகல்.
காற்று – அவரை, பீன்ஸ், மொச்சைக்காய், காராமணி, தட்டைப் பயறு.
நிலம் - கருணை, சேனை உள்ளிட்ட கிழங்குகள்.
http://www.vikatan.com/anandavikatan/2016-dec-28/serials/126834-thousand-suns-thousands-moons-but-only-one-earth.art
காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களை வாங்கிச் சாப்பிடுவது நல்லது. முடியாதவர்கள், சிறிது புளியைக் கரைத்து, அந்த நீரில் கொஞ்சம் வினிகரைக் கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால், காய்கறி, பழங்களில் உள்ள ரசாயனம் 95 சதவிகிதம் நீங்கிவிடும். பீன்ஸ், பாகற்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை, மஞ்சள்தூள் போட்டு மூன்று முறைக்கு மேல் கழுவுவது நல்லது.
http://www.vikatan.com/anandavikatan/2016-dec-21/serials/126633-healthy-foods.art
கோடைகாலத்தில் ( சித்திரை, வைகாசி) அரைக்கீரை ம ற்றும் புளிச்சகீரையைத் தவிர்க்க வேண்டும்.
காற்று அதிகம் உள்ள காலங்களில் (ஆனி, ஆடி) அரைக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
முன் மழைக்காலங்களில் (ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
பின் மழைகாலங்களில் ( ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் கீரைத்தண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
முன் பனிக்காலங்களில் (மார்கழி, தை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை ஆகியவை வேண்டாம்.
பின் பனிக்காலங்களில் ( மாசி, பங்குனி) சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் பருப்புக்கீரையைத் தவிர்க்கலாம்.
பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை எல்லாப் பருவங்களிலும் சாப்பிடலாம்.
பஞ்ச தீபாக்னி சூரணம்:
குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா? சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடி செய்து, அத்துடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர், இதிலிருந்து இரண்டு முதல் நான்கு சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுங்கள். இது நேரத்துக்கு பசியைத் தூண்டும்; ஆரோக்கியத்தையும் பராமரிக்கும்.
`நறுக்கின காய்கறித் துண்டுகளை புளியில கொஞ்சம் ஊறவிட்டு வேகவிடும்மா... மல்லித்தழையையும் பெருங்காயத்தையும் இறக்கும்போதுதான் போடணும்; காயவிடக் கூடாது. அப்புறம் அதுல மணம் இருக்காது.’
http://www.vikatan.com/news/health/78773-health-benefits-of-tamarind.art
No comments:
Post a Comment