Wednesday, October 5, 2016

தெரிய வேண்டிய சட்டங்கள்

ஆனால் பெண்களைப் பொருத்தவரை, ஆபத்து நேரங்களில் அவர்கள் எந்தக் காவல் நிலையத்திலும் FIR புகாரைப் பதிவு செய்யலாம். அது ஜீரோ
எஃப்ஐஆர்(Zero FIR)ஆகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சம்பவம் நடந்த இடத்தின் அடிப்படையில் அது எந்தக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமோ அங்கு மாற்றப்பட்டு,  அந்தப் புகார் விசாரிக்கப்படும்

ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொருத்தவரை, நேரடியாகவே சம்பந்தப்பட்ட நீதிபதியின் இல்லத்தில் வழக்குகளும், பெயில் மனுக்களும் விசாரிக்கப்படலாம் என்பது பெண்களுக்குச் சாதகமான அம்சம்

செக்‌ஷன் 354: 
வெளியிடத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்கூட ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமான வார்த்தைகள் தாக்குதலோ அல்லது உடல் ரீதியான தாக்குதலோ நிகழ்த்தும் எவரின் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம்.

செக்‌ஷன் 503:
ஒருவர் தன்னைக் காயப்படுத்தி மிரட்டினால்  ,    தன் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்தால்   ,    கட்டாயப்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான செயலை தன்னைச் செய்யவைத்தால் பாதிக்கப்பட்டவர் அந்த நபர் குறித்து செக்‌ஷன் 503-ன் கீழ் புகார் அளிக்கலாம்

செக்‌ஷன் 164:
நீதிமன்ற விசாரணையின்போது, டாப்ஸியின் வழக்கறிஞர் அவரிடம் மிகவும்  பெர்சனலாக கேள்விகளைக் கேட்பார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, டாப்ஸி தன் வாக்குமூலங்களை தனியறையில், கேமரா பதிவின் கீழ் வழங்கும் உரிமையை அவருக்கு வழங்குவார்

http://www.vikatan.com/news/india/69160-pink-movie-taught-girls-about-zero-fir.art





No comments: