Sunday, October 16, 2016

சிறந்த உள்ளாட்சி 2 (Best Local Bodies in Tamil Nadu 2)

ஒரு கிராமப் பஞ்சாயத்து தனது வரிகளை 100 % வசூலித்தால் தமிழக அரசு அதற்கு இணையாக மூன்று மடங்கு ஊக்கத் தொகை வழங்குகிறது. ஊர் மக்களிடம் பேசினார் லிங்கம்மாள். அரசுக்கு முழுமையாக வரி செலுத்த வேண்டிய அவசியத்தை விளக்கினார். சிறப்பு முகாம்கள் நடத்தினார். வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரைபட அங்கீகாரக் கட்டணம் என்று 100 % வரியை வசூலித்தார். ரூ.20 ஆயிரமாக இருந்த வரி வருவாய் ரூ.1.75 லட்சமாக உயர்ந்தது. அதற்கு ஈடாக ரூ.5.25 லட்சம் ஊக்கத் தொகை பெற்றார்.

மருத்துவச் செலவு, பிரசவ செலவு, கல்விக் கட்டணம், சிறு கடை வைக்க கடன் தர்றோமுங்க. கல்யாணம், காது குத்து, நல்லது, கெட்டதுகளுக்கும் கடன் உண்டுங்க. ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கோம்” என்கிறார். கொடுக்கும் தொகைக்கு எழுதி வாங்குவது கிடையாது. சரியான காரணமாக இருந்தால் உடனே பணம் தருகிறார்கள். பதிவேட்டில் தவணைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் திட்டத்தில் வராக்கடன் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-12-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/article9210142.ece


தற்போது 90 இருளர் குடும்பங்கள் இங்கே வசிக்கின்றன. அனைவருக்கும் கழிப்பறை மற்றும் தோட்டத்துடன் கூடிய சொந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலையில் பிரிண்ட் போடுவது, பூ வேலைப்பாடுகள் செய்வது என்று தொழில் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையிடம் பேசி, இல வசமாக 25 கறவை மாடுகளை வாங்கிக் கொடுத் தார். அதிகத்தூர் இருளர் காலனி மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங் கப்பட்டு அருகில் இருக்கும் காக்கலூர் பால் பண்ணைக்கு பால் விற்பனை செய்கிறார்கள். இதேபோல இங்கு நிரந்தர வீடுகள் இல்லாமல் குடிசைகளில் வசித்த ஆதி திராவிடர் குடும்பங்களுக்காக ஆதி திராவிடர் காலனி உருவாக்கப்பட்டது. அனைத்து சமூகத்து மக்களும் படிக்க பள்ளிகள் இருக்கின்றன.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-8-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/article9187554.ece


பொதுவாக ராமநாதபுரத்தை ‘தண்ணி யில்லாக் காடு’ என்பார்கள். வைகையின் கடைமடை பாயும் பகுதி அது. வைகையின் தலைமடைக்கே தண்ணீருக்கு வழியில்லை. கடைமடையின் நிலையைச் சொல்லவா வேண்டும்? மதுரை யில் தொடங்கி ராமநாதபுரம் வரை காய்ந் துக்கிடக்கிறது வைகையும் அதன் பிள்ளை களுமான கண்மாய்களும். ராமநாதபுரத்தில் நிலத்தடி நீரைப் பருகலாம் என்றால் கடும் உப்பு கரிக்கிறது. ஊருக்கு நூறு பேர் சிறுநீரகக் கோளாறால் அவதிப்படுகிறார்கள். ஆனால், நிலைமை இன்றைக்கு பரவாயில்லை. காரணம், அரியனேந்தல் கிராமப் பஞ்சாயத்து. மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குடிக்கி றார்கள். சுத்திகரிப்பு என்றால் சும்மா குளோரின் பவுடரைக் கலந்துவிடுவது அல்ல. எதிர் சவ்வூடு பரவல் (Reverse osmosis) முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். நாம் 20 ரூபாய் கொடுத்து பாட்டிலில் வாங்கிப் பருகும் தண்ணீரை அவர்கள் குடம் 5 ரூபாய்க்கு வாங்குகிறார்கள்


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-18-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/article9238344.ece




இப்போதும் அந்த ஊருணியில் தண்ணீர் இருக்கிறது. கோடைகாலத்தில் ஓரிரு மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் பெருகியிருக்கிறது. உப்புத் தன்மையும் குறைந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஊருக்குள் இருக்கும் அழகிய மீனாள் கோயில், செட்டி அய்யனார் கோயில், நவநீத கிருஷ்ணன் கோயில், ஆயத்துறை காளியம்மன் கோயில் ஆகிய இடங்களிலும் ஊருணிகளைத் தூர் வாரி சீரமைத்திருக்கிறார் நந்தகோபாலன். தற்போது மழையில்லாமல் சுற்றுவட்டாரக் கிராமங்கள் அனைத்தும் காய்ந்துகிடக்க இங்கு மட்டும் நீர் நிறைந்து காணப்படுகின்றன ஊருணிகள். ஒவ்வோர் ஊருணி நிரம்பிய பின்பும் அடுத்த ஊருணிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால்களையும் சிரமைத்திருக்கிறார்கள்.



http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-17-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article9233642.ece








No comments: