Friday, August 5, 2016

புறநானூறு - 140. தேற்றா ஈகை!

புறநானூறு - 140. தேற்றா ஈகை!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் விடை. 


தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம்சில

அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலில் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்

போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே?

பொருளுரை:

நடுவு நிலைமை தவறாத புலவர்களே! பெரிய பலா மரங்களையுடைய 
நாஞ்சில் நாட்டு அரசன் நிச்சயமாக ஒரு மடையன்! 
வளையல் அணிந்த விறலியர், தோட்டத்தில் பறித்த கீரையைச் சமைத்த பொழுது, 
அக்கீரையின் மேல் தூவுவதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டர்கள். 

தான் பரிசிலருக்கு உதவும் முறையை அறிதலால் என் வறுமையைல் கருதாமல், 
தன் தகுதியை எண்ணி, பெரிய காடுகள் சூழ்ந்த மலைபோன்ற ஒரு யானையை அளித்தான். 

இப்படி ஆராயாது அளிக்கும் ஈகையும் உண்டோ? 
பெரியவர்கள் தங்கள் கடமையைச் சிந்தித்துச் 
(செய்யும் முறையைப் பாதுகாத்துச்) செய்ய மாட்டர்கள் போலும்!


Description:(A song About Naanjil Valluvan)

The Naanjil hill is very high. 
There are many jack trees. 

Oh poets having tongues which sing great Thamizh songs ! 
It seems that Naanjil Valluvan is a fool who cannot know the truth. 

He gives an elephant which looks like a hill as a gift to those 
who come to get some rice to cook. 

What an ignorance ! It seems that there will be such gifts in this world. 
Will not the bgreat people do their duties knowing the right way ? 
-Awvaiyaar



மூலம்:

http://puram400.blogspot.ie/2010/01/140.html

http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

No comments: