Tuesday, July 5, 2016

புறநானூறு - 128. முழவு அடித்த மந்தி!

புறநானூறு - 128. முழவு அடித்த மந்தி!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம். 

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறுஎழுந்து ஆலும்

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

பொருளுரை:

ஊர்ப் பொதுவிடத்துப் பலாமரத்தின் பெரிய கிளையில் இருந்த குரங்கு, 
பரிசிலர் தூக்கிவைத்திருந்த இறுகக் கட்டிய முழவை பலாப்பழம் என்று எண்ணி, 
அதன் இனிய ஒசை பிறக்கும் தெளிந்த இடத்தில் அடித்தது. 

அதைக் கேட்ட ஆண் அன்னப் பறவைகள் அந்த ஒசைக்கு மாறாக ஒலித்தன. 
கழலும் வீரவளையல்களை அணிந்த ஆயின் மேகங்கள் 
தவழும் பொதிய மலை ஆடிவரும் மகளிரால் அணுக முடியுமே 
தவிர பெருமை பொருந்திய மன்னர்களால் அணுக முடியாது


Description: (A Song About Vel Aai Andiran)

There is a jack tree in the centre of the town. 
There was a monkey on a big branch of it. 

It tapped the muzhavu of the Paanaas which was hung on the tree thinking it as a jack fruit. 
When it tapped the muzhavu ,it sounded. 

On hearing the sound, the annams flew away with fear. 
Aai's hill has such a fertility. 
The Virali who has worn bangles can reach the Podhihai hill which has a lot of rain. 
But the enemies cannot reach it at any cost. 

-Uraiyoor Eanichcheri Mudamosiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/11/128.html

No comments: