Thursday, June 2, 2016

புறநானூறு - 114. உயர்ந்தோன் மலை!

புறநானூறு - 114. உயர்ந்தோன் மலை!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது.


ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்; சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற;
களிறுமென்று இட்ட கவளம் போல
நறவுப்பிழிந்து இட்ட கோதுஉடைச் சிதறல்

வார்அசும்பு ஒழுகு முன்றில்
தேர்வீசு இருக்கை நெடியோன் குன்றே.



பொருளுரை:

யானை மென்று துப்பிய கவளம் சிதறிக் கிடப்பதைப் போல்,
மதுவடித்த பிறகு ஒதுக்கப்பட்டுச் சிதறிக் கிடக்கும் சக்கையிலிருந்து
மதுச் சேறு ஒழுகும் முற்றத்திலிருந்து தேர்களை வரையாது
வழங்கும் இயல்புடைய உயர்ந்தோனாகிய

பாரியின் குன்று இங்கு நின்றோர்க்கும் தெரியும்;

இன்னும் சிறிதளவு தூரம் சென்று நின்றவர்களுக்கும்
அது தெளிவாகத் தெரியும்.

Description: (A Song About Vel Paari)

Parambu is visible to those who stand here .
It will be visible to those who stand in a little far off distance.

Paari's Parambu hill has a front yard where the honey from the honey comb
which is crushed like the food by the elephant runs
and has places where the chariots will stand.
-Kapilar


No comments: