பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய்; செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்றுஅமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே.
பொருளுரை:
தேவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேள்வி நடத்தி,
அதன் மூலம் உணவுப் பொருட்களை அவர்களுக்கு உண்பித்துப் பெறுதற்கரிய முறைமையுடைய
கரும்பை இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல்,
கடலால் சூழப்பட்ட நிலத்தின்கண் தன் ஆணையை நிலைநாட்டிப்
பழைய நிலைமை பொருந்திய மரபுடைய உன் முன்னோர் போல,
காலில் பொன்னாலான அழகிய கழல்களும்,
கழுத்தில் பெரிய பனம்பூ மாலையும்,
பூக்கள் நிறைந்த சோலையும், பகைவரைக் குத்தியதால் ஈரத் தசைகளுடைய நெடிய வேலும்,
ஏழு சின்னங்களுடைய முத்திரையும் ஐயத்திற்கு இடமில்லாத அரசுரிமையும் தவறாமல் பெற்றிருந்தாலும்,
உன் மனம் நிறைவடையவில்லை.
போரை விரும்பி, ஒலிக்கும் ஓசையுடன் கூடிய முரசோடு சென்று
எழுவரையும் வென்ற பொழுது உன் ஆற்றல் வெளிப்பட்டது.
அன்றும் நீ பாடுவதற்கு அறியவனாக இருந்தாய்.
கோவலூரில் பகைவரின் மிகுந்த வலிமையையும் அவர்களது அரண்களையும்
அழித்து ஆட்சிச் சக்கரத்தை ஏந்திய
உன் வலிமையைப் (தோளைப்) பாடுவது இன்றும் அரிதே.
பரணனால் தானே உன்னைப் பாட முடிந்தது!
Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)
You respect Devaas, do velvies, give the rare sugarcane to this world,
rule up to Naahalogam which is under the sea and you live like your ancestors.
You have golden kazhals on your legs and garland made up of palm flowers.
You have parks with plenty of flowers, vel which has flesh, seven kinds of symbols and long lasting ruling right.
Though you have so many like this, you went to fight with the seven kings.
You defeated them and had the strength which cannot be sung.
Now ,because of your Kovaloor victory you have attained the fame of being sing by Paranar.
-Awvaiyaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/09/99.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html
1 comment:
Great that our ancient scriptures talk about the significance of milk. However in today's scenario it is important to source unadulterated Milk Home Delivery in Chennai as drinking the commercial milk available in the market is going to do only more bad for health.
Post a Comment