Friday, April 8, 2016

புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!

புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!

பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம்.
திணை: காஞ்சி 
துறை: வஞ்சினக் காஞ்சி 

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து

ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்

கழைதின் யானைக் கால்அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்றுஅவண்

வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே!

பொருளுரை:

மெல்ல வந்து என் காலில் விழுந்து “கொடு” என்று என்னைக் கெஞ்சிக் கேட்டால் புகழுடைய 
முரசோடு கூடிய என்னுடைய உரிமைச் சொத்தாகிய இந்நாட்டை அடைவது எளிது. 

அது மட்டுமல்லாமல், என் இனிய உயிரைக்கூடக் கொடுப்பேன். 
ஆனால், வெட்ட வெளியில் படுத்துறங்கும் புலிமேல் தடுக்கி விழுந்த குருடன் போல் இந்நாட்டு மக்களின் ஆற்றலைப் போற்றாது 
போருக்கு வந்து என்னை ஏளனப்படுத்தும் அறிவிலி நெடுங்கிள்ளி இங்கிருந்து தப்பிப்போவது அரிது. 

மூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் குத்திய வலிய பெரிய நீண்ட முள்போல் அவனைத் துன்புறுத்திப் போரிடேனாயின், 
தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத மிகுந்த கரிய கூந்தலையுடைய மகளிர் (விலை மகளிர்) 
என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்


Description:(A Song Written By Sozhan Nalangkilli)

If the enemies come slowly, touch my feet and beg, 
I will easily give my kingdom which has a great murasu. 

I will even give my sweet life. 
Due to their strength , if they insult my strength they cannot escape from me like the blind who stuck the sleeping tiger. 
Like the bamboo which is under the feet of the elephant is got crushed, I will destroy them. 
If I do not do this , let my garland be on the body of the lady who does not have real love.

முலம்:
http://puram400.blogspot.in/2009/04/puranaanuuru-poem-73.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html



1 comment:

Anonymous said...

மூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் சிக்கி நசுங்கிய மூங்கில் முளைக்குருத்து போல அவனைப் போரிட்டு நசுக்குவேன்