Thursday, March 31, 2016

புறநானூறு - 65. நாணமும் பாசமும்!

புறநானூறு - 65. நாணமும் பாசமும்!

பாடியவர்: கழாஅத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.
திணை: பொதுவியல். 
துறை : கையறுநிலை.
சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு. 

மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்

அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த

புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு
நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே!

பொருளுரை:

முரசு முழங்கவில்லை. யாழ் வாசிக்கப்படவில்லை. 
அகன்ற தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது. 
வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை. உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை. 
சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை. முழுமதி தோன்றும் பெருநாளில், 
ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, 

அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், 
தன்னைப் போன்ற ஒருவேந்தன், மார்பைக் குறிவைத்து எறிந்த வேலால் 
முதுகில் உண்டாகிய புண்ணால் நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். 
அதனால், இங்கே. முன்பு இருந்ததுபோல் பகல் பொழுதுகள் கழிய மட்டா.

Description: (A Song About Seramaan Perunjcheralaadhan)
The muzhavus lost being pasted with soil. 
The yaazhs forgot music. 
The broad , big pots laid without persons who chyrn curd as there was no milk. 
Without drinking honey the relatives were bverysad. 

There was not the farmers' ploughing sound. 
It was why that village had lost its festive beauty. 
On the full moon day, though the moon and the sun appear in the east and west, 
the sun sets in the mountain in the evening. 

Like the disappearance of the sun , 
the brave king felling shame sat with his sword and left his life 
as he had got wound on his back. 

So for us who live without him, the day too will not pass sweetly. 
-Kazhaaththalaiyaar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/65.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html

No comments: