Tuesday, March 29, 2016

புறநானூறு - 63. என்னாவது கொல்?

புறநானூறு - 63. என்னாவது கொல்?

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது.
திணை: தும்பை.
துறை : தொகை நிலை.

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;

தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே;
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென

வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்

காமர் கிடக்கைஅவர் அகன்றலை நாடே?

பொருளுரை:

எத்தனை யானைகள் அம்பால் தாக்கப்பட்டுத் தொழிலின்றி இறந்தன!
வெற்றிப் புகழ் கொண்ட பெருமைக்குரிய குதிரைகள் எல்லாம் வலிமை வாய்ந்த படைவீரர்களுடன் போர்க்களத்தில் மாண்டன.

தேரில் வந்த வீரர்கள் எல்லாம் தாம் பிடித்த கேடயம் தங்கள் கண்களை மறைக்க ஒருங்கே இறந்தனர்.
இறுகக்கட்டப்பட்ட, மயிருடன் கூடிய முரசுகள் அவற்றைத் தாங்குவோர் இல்லாமல் கிழே கிடந்தன.

சந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல் பாய்ந்ததால் இரு வேந்தர்களும் போர்க்களத்தில் இறந்தனர்.
வயலில் விளைந்த ஆம்பல் தண்டால் செய்த வளையலணிந்த கையினை உடைய மகளிர் பசிய (வளமான)
அவலை உண்டு குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும், புது வருவாய் குறையாத அழகிய குடியிருப்புகள்
அடங்கிய அகன்ற இடங்களை உடைய நாடு இனி என்ன ஆகுமோ?


Description: (A Song About Seran Kudakko Nedunjcheralaadhan and Sozhan Perunarkkilli)
So many elephants died by attacked with arrows.
The horses having victorious fame died with their warriors.
The chariot warriors died as their shields hid their eyes.

The black faced victorious drum which was covered with the leather of the bull
which was not shaved laid without players.

The vels pierced the sandal applied chests of the two great kings and they were dead.
There is nothing more to worry about.
Their fertile land has vast places where the ladies who had worn bangles
made up of the stem of aambal plant ate rice flakes and played in the water.

These two lands were perished due to the war. -Paranar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/63.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html

No comments: