Saturday, March 26, 2016

புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!

புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. திணை; வாகை. 
துறை; அரச வாகை. 

கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்

புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்

குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து
செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனில்

தாமறி குவர்தமக்கு உறுதி; யாம்அவன்
எழு திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது
திருந்துஅடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல் அதனினும் இலமே!

பொருளுரை:

கொண்டையாக முடிந்த முடியும், முடியில் செருகிய தழையும் உடைய மருதநிலப் பெண்கள், 
சிறிய வெள்ளாம்பலுடன் ஆம்பலையும் களைவர். 

வயல்களில் மலங்கு மீன்கள் ஒளிருகின்றன. 
அந்த வயல்களில் தளம்பைப் பயன்படுத்தியதால், 
பருத்த வாளை மீன்கள் துண்டிக்கப் படுகின்றன. 

புதுநெல்லைக் குத்தி ஆக்கிய வெண்மையான சோற்றின் மேல் அந்த வாளைமீன் துண்டுகளைத் தூவி, 
விலாப் புடைக்க உண்ட மயக்கத்தால், 
நெடிய நெற்கதிர்களின் கட்டுகளை வைக்கும் இடம் தெரியாமல் உழவர்கள் தடுமாறுவர். 
வலிய கைகளையுடைய உழவர்களின் இளஞ்சிறுவர்கள் தென்னை மரங்கள் தரும் தேங்காய்களை வெறுத்துத், 
தம் தந்தையரின் குறுகிய இடங்களில் உள்ள நெடிய வைக்கோற் போரில் விரைந்து ஏறி பனம்பழத்தைப் பறிக்க முயல்வர். 

நாள்தோறும் புதிய வருவாயையுடைய நல்ல நாட்டிற்கு அரசனாகிய நலங்கிள்ளி சேட்சென்னி, 
வேல் ஒளிரும் பெரிய கையினையும் நன்கு செய்யப்பட்ட தேரையும் உடையவன். 

ஒளி நிறைந்த மலர் மாலைகளை அணிந்த மார்பையுடைய சேட்சென்னியுடன் போர்புரிபவர்கள் இருப்பார்களானால், 
அவர்களுக்கு நேரப் போவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். 

நாங்கள் கணையமரம் போன்ற வலிய தோள்களையுடைய அவனோடு போரிட்டவர்கள் வாழக்கண்டதில்லை. 
விரைந்து சென்று அவனது நல்லடியை அடைய வல்லோர் வருந்தக் கண்டது அதனினும் இல்லை.


Description: (A Song About Sozhan Ilavandhigaippalli Thunjchiya Nalangkilli Setchchenni)
The farm maids have tied up hair adorned with cold leaves. 
They weed out aambal plants and neidhal plants which grow among the crops. 

In the fertile field the malangu fishes are squirming. 
The farmers eat vaalai fish curry with rice stomachful. 
They amaze where to store the paddy ears. 
The small headed children of the strong handed farmers do not like to eat coconuts. 

They climb up the heap of paddy and try to pluck the palm fruits. 
Setchchenni has long hand with vel and has beautiful chariot. 
His fertile land has new income everyday. 
He has worn colourful garlands which look like rainbows on his chest. 

Those who come to fight against him know their end. 
We don't see those who fight against him who has pillar like shoulders escape and live. 
Like that, we also don't see those who obey him suffer. 

-Madhurai Kumaranaar



முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/61_01.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html



No comments: