Saturday, March 26, 2016

புறநானூறு - 60. மதியும் குடையும்!

புறநானூறு - 60. மதியும் குடையும்!


பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று .
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.
திணை: பாடாண். 
துறை : குடை மங்கலம்.

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த

சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ பலவே; கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்

வலன்இரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே.


பொருளுரை:

கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள விளக்குப் போல, 
சிவந்த வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. 

அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, 
சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து பலமுறை தொழுதோம் அல்லவோ? 
அது ஏன் தெரியுமா? கடற்கரையிடத்து உப்பங்கழியில் விளைந்த உப்பைச் சுமந்துகொண்டு 
மலை நட்டுக்குச் செல்லும் ஆரக்காலையுடைய வண்டியைக் குண்டு குழிகளின் 
வழியே இழுத்துச் செல்லும் வலிய காளையைப்போன்றவன் எம் தலைவன். 

அவன் வெற்றியுடன் முழங்கும் முரசையும், குறி தவறாத வாளையுமுடையவன். 
வெயிலை மறைபப்பதற்காக அவன் கொண்ட அச்சம் பொருந்திய சிறந்த மாலை அணிந்த குடையைப் போன்றது 
அந்த முழு நிலா என்று நினைத்து அவ்வாறு தொழுதோம்.


Description: (A Song About Sozhan Thirumaavalavan)
The red star shines in the sky as the light which is lighted in the boat in the sea. 
On seeing the full moon the peacocks dance joyfully. 

I and the Virali, who has worn some bangles , 
who were coming through the forest way saw the full moon and worshiped it several times. 

Our lord Sozhan Thirumaavalavan is like a bull 
which is capable of pulling a salt loaded cart from the seashore to a mountain land. 

He has victorious drum and sword. 
We worshiped the full moon thinking that it is the white umbrella erected by the Sozhaa 
to hide the sun. Now we are seeing his white umbrella. 
It is not necessary to tell us to worship it. 

-Uraiyoor Maruththuvan Dhaamodharan
முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-56-to-60-english.html

No comments: