புறநானூறு - 55. மூன்று அறங்கள்
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.
ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!
பொருளுரை:
உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு,
ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து,
பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின்
அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல்
மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!
கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை,
விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை,
உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை,
நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும்,
பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல்,
இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல்,
கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை,
மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி,
இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே!
ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும்
அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.
Description: (A Song About Paandiyan Ilavandhigaippalli Thunjchiya Nanmaaran)
Lord Siva has a sapphire like throat. He made the big , high Meru mountain as a bow and Vaasuhi snake as a chord.
He destroyed the three forts with a single arrow.
He has worn the crescent moon on his hair.
On his beautiful face, there is an eye on the forehead.
You are like that forehead eye of Lord Siva and you are above all kings.
Oh Maaraa wearing garland and having fame ! The kingdom which has the big four army is a good kingdom.
The four armies are: 1.Fighting elephants which have much anger
2.Horses which run fast
3.Big chariots which have long flags
4.Warriors who have strong will.
The greatness of the kingdom depends upon its righteous rule.
The king should not bend the scepter to hide the crime of one who is his favorite .
He should not think to punish one without considering his good qualities as he is a stranger.
Oh king ! You shine like the red sun which gives light commonly.
You give cold light like the white moon. You give gifts like the rain.
You give those who come to you saying that they have nothing, without saying “No”.
Oh great king! You live long. In the Thiruchendur town white waves are destroying again the seashore.
Oh king! You live billions of years than the spread sand.
-Madurai Marudhan Ilanaahanaar.

No comments:
Post a Comment