Friday, March 18, 2016

புறநானூறு - 53. செந்நாவும் சேரன் புகழும்!

புறநானூறு - 53.  செந்நாவும் சேரன் புகழும்!

முதிர்வார் இப்பி முத்த வார்மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து
இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற

களங்கொள் யானைக் கடுமான் பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து

வாழேம் என்றலும் அரிதே; தாழாது
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்

பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே.

பொருளுரை:

முதிர்ந்து நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில் ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், 
விளங்கும் வளையல்களை அணிந்த மகளிர், திண்ணைகளில் விளையாடும் விளங்கில் என்னும் ஊர்க்குப் பகைவரால் வந்த துன்பங்களைத் தீர்ப்பதற்காகப் 
போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானைப்படையையும் விரைந்து செல்லும் குதிரைப்படையையும் உடைய பொறைய! உன் புகழை விரித்துக் கூறினால் அது நீளும்; 

சுருக்கமாகத் தொகுத்துக் கூறினால் பல செய்திகள் விடுபட்டுப் போகும். ஆதலால், மயக்கமுறும் நெஞ்சத்தையுடைய எம் போன்றவர்களால் உன் புகழை உறுதியாகக் கூற முடியாது. 
அதனால், கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப்பெரிய உலகத்து வாழ்க்கையை வெறுத்து வாழ மாட்டோம் என்று கூறுவதும் இயலாத செயல். 

”விரைவாகப் பல பொருள்களையும் அடக்கிய சிறந்த செய்யுட்களை இயற்றும் மிகுந்த கேள்வி அறிவுடைய , புகழ் மிக்க கபிலர் இன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நீ கூறினாய். 
உன் வெற்றிச் சிறப்புக்குப் பொருந்தும் முறையில் என்னால் முடிந்தவரை உன் வெற்றியைப் புகழ்ந்து பாடுவேன்.


Description: (A Song About Seramaan Maandharanjcheral Irumporai)

The spread white sand looks like the pearl in the matured shells . 
The shining gems are fixed in the storeys. The ladies who have worn beautiful bangles, gathered to dance kuravai dance in Vilangil town. 
The enemies tried to stop their dance. You defeated them and removed the sorrow of the dancers. 

You have the honour of having strong elephants and fast running horses. If we elaborate your fame, it will go on increasing. 
If we try to tell it briefly, it will go on growing. Poets like me cannot tell it fully ever. 

Your fame astonishes us. Though your fame is vast in this world where so many scholars have born.

We should not stay saying that we could not do. 
It will be nice, if Kapilar, who has the ability of writing many meaningful poems very quickly , is alive now. 
You feel that you are not lucky enough to have him today. 
Though Kapilar is not alive, I will sing your fame got by defeating your enemies as much I can. 

-Porundhil Ilangkeeranaar

No comments: