Sunday, March 13, 2016

புறநானூறு - 48. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல !

புறநானூறு - 48. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல !


கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;

அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

பொருளுரை:

சேரன் கோக்கோதை மார்பில் அணிந்த மாலையாலும், அந்தக் கோதையைக் கூடிய மகளிர் அணிந்த மாலைகளாலும், 
கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். 
அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன். முதிய வாய்மையுடைய இரவலனே!
அத்தன்மையுடை ய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? 
”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.

Description:(A Song About Seramaan Kokkodhai Maarban)

Thondi is a place having seashore parks which are smelling like honey because of the garlands worn by Kokkodhi Maarban , 
the garlands worn by the ladies who married him and the neidhal flowers which blossomed in the big back water. 
That Thondi is our town. 

On old man! Oh beggar speaking the truth! If you go to that Seraa king to get gifts, 
you tell that you have seen a poet who sang his fame on your way. -Poihaiyaar


முலம்:



No comments: