Thursday, March 10, 2016

புறநானூறு - 46. அருளும் பகையும்!

புறநானூறு - 46. அருளும் பகையும்!

பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வஞ்சி. 
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது. 


நீயே  புறவின்அல்லல்  அன்றியும்  பிறவும்
இடுக்கண்  பலவும்  விடுத்தோன்  மருகனை
இவரே  புலன்உழுது  உண்மார்  புன்கண்அஞ்சித்
தமதுபகுத்து  உண்ணும்  தண்ணிழல்  வாழ்நர்
களிறுகண்டு  அழூஉம்  அழாஅல்  மறந்த
புன்தலைச்  சிறாஅர்  மன்றமருண்டு  நோக்கி
விருந்திற்  புன்கண்  நோவுடையர்
கேட்டனை  யாயின்நீ  வேட்டது  செய்ம்மே.


பொருளுரை:

நீதான் புறாவின் துன்பம் மட்டுமல்லாமல் மற்ற துன்பங்கள் பலவற்றை நீக்கிய சோழ மரபின் வழித்தோன்றல். 
இச்சிறுவர்களின் மரபினர், கற்றவர்களது வறுமையை கண்டு அஞ்சி, 
தமது உணவை பங்கிட்டு உண்டு, அவர்களுக்கு குளிர்ந்த நிழலாக விளங்கி வாழ்ந்தவர்கள். 

ஆனால் இங்கே, கொல்ல வரும் யானையை கண்டு அழுது, பின்பு அழுகையை மறந்து, பொலிவிழந்த தலையுடைய இச்சிறுவர்கள், 
மன்றத்தை மருண்டு நோக்கி வாழ்வில் முன்பு அறியாத புதிய துன்ப வலியை அடைந்திருக்கின்றனர். 
நான் கூறிய அனைத்தையும் நீ கேட்டாய் என்றால் இனி நீ விரும்பியதை செய்.


Description: (A Song About Sozhan Kulamuttraththuth Thunjchiya Killivalavan)

Oh Valavaa! You are the successor of the Sozhaa dynasty which has pure, 
kind heart which removes not only the suffering of the pigeon but also the sufferings of other living beings. 

These children belong to a noble family which fears to see the poverty of the scholars 
and which wishes to live by sharing. 

They have no fear for the elephant which is about to kill them and laugh clapping their hands.
They are afraid of the big court. They are suffering from a strange fear. 

Is it fair to kill these children? I have told you enough. You do whatever you want. -Kovoorkkizhaar


முலம்:

No comments: