Monday, March 7, 2016

புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!

புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான். திணை : வாகை. துறை: அரசவாகை. குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு நிலமிசை வாழ்ந ரலமர றீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக நேரார்க் கடந்த முரண்மிகு திருவிற் றேர்வண் கிள்ளி தம்பி வார்கோற் கொடுமர மறவர் பெரும கடுமான் கைவண் டோன்ற லைய முடையேன் ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவா யென்னினும் நீபிழைத் தாய்போ னனிநா ணினையே தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின் யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள் மிக்கு வரு மின்னீர்க் காவிரி எக்க ரிட்ட மணலினும் பலவே. பொருளுரை: இப்பாட்டில் தாமற்பல்கண்ணனார், “இவ்வுலகில் உயிர் வாழ்பவர்களின் துன்பங்கள் நீங்க, சுடும் கதிர்களையுடைய கதிரவனின் வெப்பத்தைத் தாம் பொறுத்து, காற்றை உணவாகக் கொண்டு அச்சுடருடனே சுழன்று வரும் விளங்கிய சடையையுடைய தவம் செய்யும் முனிவர்களும் திகைக்க, வளைந்த சிறகினையும் கூரிய நகங்களையுமுடைய பருந்தின் இடி போன்ற தாக்குதலைக் கருதி, அதன் இலக்கினின்றும் தப்பி தனது இடத்தையடைந்த குறுகிய நடையையுடய புறாவின் அழிவுக்கு அஞ்சி, தான் தராசுத்தட்டில் அமர, அளவில்லாத வள்ளன்மையும், வலிமையும் உடையவனின் மரபில் வந்தவனே! பகைவரை வென்ற வலிமை மிகுந்தவனும், செல்வங்களையும் உடைய சிந்தனை மிகுந்த கிள்ளிவளவனின் தம்பியே! நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ! விரைந்து செல்லும் குதிரைகளையும், கைவலிமையையும் உடைய தோன்றலே! உனது குடிப்பிறப்பின் மீது சந்தேகம் கொள்கிறேன். ஆத்தியால் செய்த மாலையை அணிந்த உன் முன்னோர்கள் யாவரும் பார்ப்பனர் வருத்தம் கொள்ளும் செயல்களைச் செய்ய மாட்டார்கள். எனவே இத்தகைய செயல் உனது தகுதிக்கு ஏற்றதோ?” என்று நீ வெறுக்கும்படி கூறினேன். உன்னிடம் நான் செய்த தவற்றிற்கு கோபப்படுவாய் என்றாலும், நீ தவறு செய்தது போல மிகவும் வெட்கப்பட்டாய். இவ்வாறு உன்னிடம் தவறிழைத் தவர்களைப் பொறுத்துக் கொள்ளும் தலைவனே! உனது இந்தக் குலத்தில் பிறந்தோரிடம் எளிமை காணப்படும் என காட்சி தரும் வலிமை உடையோனே! நீ கருணை காட்டியதனால் நானே பிழைத்ததை என்ன சொல்வேன்! பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரியின் மணல்மேடுகளில் உள்ள மணலை விட அதிகமாக உனது வாழ்நாள் சிறப்பதாக” என சோழன் மாவளத்தானைப் பாராட்டுகின்றார். Description:( A Song About Sozhan Maavalaththaan) Even the sages who do penance in the morning and evening, having ere wind as food and bearing the sun's hotness, in order to remove the sorrow of the people , wonder on the act of the king sitting on the balance to rescue the soft walking pigeon which surrendered to him from the sharp nailed and bent winged eagle without thinking of his demise. Oh king! You are the successor of that king. You are the younger brother of Killi who has the fame of defeating he enemies and has much wealth and chariots . Oh lord of the warriors who have long arrows and bent bows! Oh lord having fast running horse and patronage! I doubt your birth. Oh lord wearing aaththi garland! Your ancestors never hurt Brahmins. I asked you is it fair to do like this ? Though I scolded you, you did not get angry with me. You felt ashamed as if you had done a mistake. You made everybody to realize that tolerating the wrong doers is the unique quality of the Sozhaas. I am the one who did the wrong. Oh brave king! Let your living days grow more and more than the sand of the Kaaviri river. -Thaamappal Kannanaar முலம்: http://eluthu.com/kavithai/144299.html http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-36-to-45-english.html

No comments: