Friday, March 4, 2016

புறநானூறு - 40. ஒரு பிடியும் எழு களிரும்!

புறநானூறு - 40. ஒரு பிடியும் எழு களிரும்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை :பாடாண். 
துறை : செவியறிவுறூஉ. 

நீயே, பிறரோம்புறு மறமன்னெயில் 
ஓம்பாது கடந்தட்டவர் 
முடிபுனைந்த பசும்பொன்னின் 
அடிபொலியக் கழறைஇய 
வல்லாளனை வயவேந்தே 

யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப் 
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற 
இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும் 
இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும 
ஒருபிடி படியுஞ் சீறிடம் 

எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே. 


பொருளுரை:

ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஒரு சமயம் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். அவர்க்கு இவனைக் காண்பது அரிதாயிற்று. நாட்கள் சில கழிந்ததும், அவனைக் காண்பதற்கு வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. 

அந்த சந்தர்ப்பத்தில் பாடிய இப்பாட்டில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நோக்கி, 
‘பகைவர்கள் பாதுகாத்த மறம் நிலை பெற்ற அரண்களைப் பாதுகாக்காமல் எதிர் நின்று அவற்றை நீ அழித்து பகைவர்களின் 
முடியில் சூடிய மகுடம் செய்யப்பட்ட பசும்பொன்னால் உனது கால்கள் அழகுபெற வீரக் கழல்கள் செய்து அணிந்த வலிய ஆண்மையை உடையவனே! வெற்றி யுடைய வேந்தே! 

ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே!
 எந்நாளும் இனிய மொழியோடும் எளிதில் அணுகக் கூடியவனாகவும் இருப்பாயாக பெருமானே! 

'நாங்கள் உன்னை இகழ்ந்து பாடுவோர் நாணி கழுத்தோடு தலை குனியவும், 
புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் சிறப்பாகத் திகழவும் இன்று காண்பது போல் அவ்வாறே 
என்றும் உன்னைக் காண்போமாக' என்று ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார்.

Description: (A Song About Sozhan kulamuttraththuth Thunjchiya Killivalavan)

Oh Killivalavaa ! You destroyed the safety forts of your enemies. 
The crowns of your enemies are adorning your feet as kazhals. 

Oh strong and victorious king ! Those who scold you bow down their heads with shame and worship your feet. 
Those who praise you get fame and greatness. We will see you with happy ever as you are today. 

Oh king ! You speak sweet words and you are sweet to us. Oh king you are having a very fertile land . 
A small piece of land where a female elephant sleeps is capable of cultivating food for seven male elephants. 

Oh king ! You live for ever. -Aavoor Moolangkizhaar


No comments: