பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
சிறப்பு: எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளு மூமுஞ் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்
கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்
பேதைமை யல்ல தூதிய மில்லென
முன்னு மறிந்தோர் கூறின ரின்னும்
அதன்றிற மத்தையா னுரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம்
கானத் தோர்நின் றெவ்வர் நீயே
புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே
அதனால், அறனும் பொருளு மின்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றா மைந்நிற் போற்றா மையே.
பொருளுரை:
மக்கட் பிறப்பில் கண்ணில்லாத குருடும், கருவில் கை, கால் முதலிய உறுப்புக்கள்
தோன்றும் பருவத்தில் ஏற்படும் குறைபாட்டால் அமையும் முறையான வடிவில்லாத உடல் உறுப்புகளின் அமைப்பும்,
கூனும், குறுகிய வளர்ச்சியுடைய நிலையும், ஊமை, செவிடும், விலங்கு வடிவமான பிறப்பும்,
புத்தி பேதலித்த அறிவு மயக்கமும் ஆகிய எட்டு வகையான பெரிய குறைபாடுகள் என்று சொல்லப்பட்ட
இவையெல்லாம் பயனற்ற பிறப்பேயன்றி வேறு அறம், பொருள், இன்பம் பயக்காது என்று
முக்காலமும் அறிந்த அறிஞர்கள் சொன்னார்கள். அதனால் பயனுள்ள செயல் எது என நான் சொல்கிறேன்.
உன் பகைவர்கள் வட்ட வடிவமான வரிகளையும்,
சிவந்த புள்ளிகளையும் உடைய காட்டுக் கோழிச் சேவல்
தினைப்புனம் காப்பவர்களைத் துயில் எழுப்பக் கூவும் காட்டில் உள்ளனர்.
நீயோ, உனது நாட்டில் வேலிக்கு அப்புறம் உள்ள மக்களுக்கு அறத்தைக் கருதி
வேலிக்கு உள்ளே உன் இடத்தில் உள்ளவர்கள் பிடுங்கி எறியும் கரும்பின் வீணான கட்டைப் பகுதிகள் அங்கிருக்கும்
குளங்களிலுள்ள தாமரை அரும்புகளின் மீது விழுந்து அவ்வரும்புகள் சிதறிக் கிடப்பது,
கழைக் கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பது போல் தோன்றும் வளமான நாட்டை உடையவன்.
ஆதலால், உன் செல்வம் நீ அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்குப் பயன்படட்டும் பெருமானே!
அவ்வாறு பயன்படாது போனால், நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறியவனா வாய்.
Description: (A Song About Sozhan Nalangkilli)
The following eight are the big defects of people who live in this world.
1.Blind 2.Born with defective parts 3.Born with bend 4.Dwarf 5.Dumb 6.Deaf
7.Having the appearance of the beasts 8.Born without wisdom.
Wise people say that there is no use fom such defective people.
Let me tell the nature of the human beings who are useful.
Your enemies have run and hid themselves in the forest where the round lined
and red dotted wood hens which crow and awake the guards of the thinai fields.
You think that it is a gift to give to those who are away from the fence and ask eagerly.
You have a fertile land, where the people cut and throw the sugarcane
and they damage the lotus flowers in the pond.
It looks like the dance theater of the Kooththaas .
You realize that the wealth is for securing ethics, money and pleasure.
You also realize that if you forget to secure ethics,
you will forget you from human beings without defect.
-Uraiyoor Mudhukannan Saaththanaar
முலம்:
http://eluthu.com/kavithai/130873.html
http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html
No comments:
Post a Comment