புறநானூறு - 27. புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
உரையும் பாட்டு முடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே.
பொருளுரை:
சேற்றில் வளரும் தாமரைச் செடியில் பூத்த ஒளி பொருந்திய தாமரை மலரின் பல இதழ்களும் ஒழுங்கான வரிசையாக அமைந்திருப்பது போல,
ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியில் பிறந்து அரசுக் கட்டிலில் இருந்த வேந்தரை எண்ணும் பொழுது புகழுக்கும்,
புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல் களுக்கும் உரியவர்கள் சிலரே; தாமரை இலை போல பயனின்றி இறந்தவர் பலர் ஆவர்.
புலவரால் புகழப்படும் புகழுடையோர் ஆகாயத்தில்,
தாம் செய்யும் நற்காரியங்களைச் செய்து முடித்து பாகனாற் செலுத்தப்படாத விமானத்தில் நல்லுலகம் செல்வர்
என அறிவுடையார் சொல்வர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் என் தலைவனான சேட்சென்னி நலங்கிள்ளி!
வளர்ந்ததொன்று குறைதலும், குறைந்ததொன்று வளர்தலும்
பிறந்ததொன்று இறத்தலும், இறந்ததொன்று பிறத்தலும் ஆகிய உண்மைகளை கல்வியால்
அறியாதவர்களுக்கும் அறியச் செய்து திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற உலகத்தில்,
வல்லவராகவோ, வல்லமை இல்லாதவராகவோ இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும் வறுமையால் வருத்தமுற்று உன்னிடம் வருவோருண்டு.
அவ்வாறு வறுமையில் வந்தோரது உண்ணாது
மெலிந்த நிலையைப் பார்த்து அவர்களுக்கு அருளி, வேண்டுவன வழங்குவாயாக!
குறைவற்ற வலிமையுடைய உனக்குப் பகையாய் மாறுபட்டு எதிர்ப்பவர்கள் அருள் இல்லாமலும் ஈகைத்தன்மை அற்றவர்களாகவும் ஆகுக!
Description: (A Song About Sozhan Nalangkilli)
Like the hundred petals of the red lotus which grows in the mud,
many kings born in high families without any difference .
But among them those who got the fame of being praised by all are a few.
Like the lotus leaves so many died without any use.
Oh our father ! I have heard from the wise people that those who got the praise of the poets
and did their duties well would get the aircraft which was not driven by the pilot.
Oh Nalangkilli ! You realize that those which grow will diminish and those which diminish will grow and attain fullness.
Those who born will die and those who die will born is the nature of this world. You made all to realize this.
Though they are the Devaas or others who come with hunger , you give them whatever they need with kindness and mercy.
Let your enemies be without kindness and mercy. Let them be without the quality of giving to the poor.
-Uraiyoor Mudhukannan Saaththanaar
முலம்:
http://eluthu.com/kavithai/130735.html
http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html
No comments:
Post a Comment