புறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்:மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தென் கடல்திரை மிசைப்பா யுந்து;
திண் திமில் வன் பரதவர்
வெப் புடைய மட் டுண்டு,
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்,
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையொடு_ கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும்,
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே;
நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன, நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
இரவன் மாக்கள் ஈகை நுவல,
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,
ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே
பொருளுரை:
நெல்லை அறுவடை செய்யும் பெரிய உழவர் சிவந்த கதிரவனது வெயிலின் வெப்பத்தைப் பொருட் படுத்தாது
தெளிந்த கடல் அலைகளின் மேல் பாய்வர். வலிமை பொருந்திய மீன்பிடிக்கும் படகுகளையுடைய வலிய மீனவர்கள் வெம்மை யுடைய மதுவை உண்டு
மென்மையான குரவைக் கூத்துக்கேற்ற தாளத்துக்கேற்ப ஆடுவர். கடற் துவலையாலே தழைத்த தேன் பாயும் புன்னையின் மெல்லிய பூங்கொத்தால் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர்
அழகிய வளையல்கள் அணிந்த மகளிரை முன்னிலைப் படுத்தி கைகளால் தழுவி ஆடுவர்.
வண்டுகள் மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறுமணம் கமழும் கடற்கரைச் சோலையில்
கடல்முள்ளி மலர்களால் புனையப்பட்ட மாலையை அணிந்தும், கைகளில் அழகிய வளையல்கள் அணிந்த இளம் பெண்கள்
பெரிய பனையினது நுங்கின் நீரும், பொலிவுடைய கரும்பின் இனிய சாறும், உயர்ந்த மணற்பாங்கான இடத்தில் விளைந்த திரண்ட தென்னையின் இனிய இளநீருடனே ஒன்றாய்க் கலந்து
இம்மூன்று நீரையும் அருந்தி மூன்று நீரையுடைய கடலில் பாய்ந்து விளையாடுவர்.
வேறுபாடில்லாத பல மக்களும் வாழும் நல்ல ஊர்கள் அடங்கிய பொருளை பெரிதென்று பத்திரப்படுத்தாது வள்ளல்
தன்மையுடைய பெரிய வேளாகிய எவ்வியின் நீர் பெருகிப் பாயும் கதவுகள் அமைக்கப்பட்ட மடைகளையுடைய நாடாகிய மிழலைக் கூற்றத்தையும்,
வயற்காட்டு நீர்ப்பரப்பில் உள்ள மீன்களை உண்ணும் நாரைகள் வைக்கோற் போரில் உறங்கும் பொன்னாலான அணிகலன் களை அணிந்த யானைகளையுடைய பாரம்பர்யம் மிக்க முதிர்ந்த வேளிரது
திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய!
உனது வாழ்நாட்களாகிய மீன்கள் நின்று நிலைக்கட்டும்! உன் பகைவர்களுடைய வாழ்நாட்களாகிய மீன்கள் நிலைக்காமல் பட்டுப் போகட்டும்!
உனக்கு இணையாக உள்ள முதிர்ந்த வாழ்நாளுடன் உயிருடன் உள்ள முதிர்ந்த உடம்பு போன்ற உனது வெற்றிக் குடிமக்களோடு,
மூத்த சீரிய குடியில் சிறந்து வாழும் வாட்போர் வீரர்கள் உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த, இரக்கும் பரிசிலர் உன் வள்ளன்மையை வாழ்த்த,
அழகிய வளைகளை அணிந்த பெண்கள் பொற் கலத்தில் கொண்டு வந்து தரும் குளிர்ந்த நறுமண முடைய மதுவை உண்டு மகிழ்ச்சி பொங்க அங்கே சிறந்து வாழ்வாயாக பெருமானே!
அப்படியாக அவ்வொழுக்கத்துடன் வாழும் வல்லவரையே வாழ்ந்தோரென்று அறிவுடையோர் சொல்வர். பரந்த இவ்வுலகத்தில் பிறந்து தொன்மையான பெருமையோடு
புகழ்பட வாழாது மாய்ந்தோர் பலர் வாழ்ந்தோரெனக் கருதப்பட மாட்டார்கள்.
Description:( A Song About Thalaiyaalangkaanaththuch seruvendra Paandiyan Nedunjchezhiyan)
The farmers who were harvesting paddy hated the heat of the sun. the fishers sprang on the clear waves.
They had strong shoulders. They drank toddy eagerly which gave them heat.
They danced kuravai dance according to the notes. They wore punnai garlands having honey filled flowers. They gave their hands to the ladies who wore bangles on their hands.
The seashore forest had fragrant flowers crowded by the bees and had coolness. The ladies wore garlands of mundahaa flowers and shining bangles.
They mixed the water of tender palm, tender coconut and sugarcane juice. They drank it and sprang into the sea which was a combination of river water, spring water and rain water.
They played and enjoyed there. There were many good towns where various people lived together.
The patron Evvi did not save money. He gave it to everybody because of his patronage. His Mizhalai had many water streams.
The naaraies ate kendai fishes in the paddy field and slept on the heap of straw. Muththooru of the ancient Velir had fertile lands and elephants wearing golden ornaments.
Oh Sezhiyaa having white, victorious umbrella and victorious chariots !
Let your living days increase. Let your enemies' living days decrease and let them die.
Like the body which is attached to your life and the life which is related your body, let your sword warriors who are related to your victorious fame say welcome to your victory.
Let the people who wish gifts from you, praise your fame. You drink the fragrant , sweet toddy poured into golden cups by the ladies who have worn beautiful bangles and live pleasantly.
Oh king ! Wise people say that those who live with fame are really living. Those who born in the vast land and die without fame are not considered as living persons.
-Maangudi Marudhan
முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/06/purananooru-16-to-25-english.html
No comments:
Post a Comment