Saturday, February 13, 2016

புறநானூறு - 20. மண்ணும் உண்பர்!

புறநானூறு - 20. மண்ணும் உண்பர்!

பாடியவர்: குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை; மாந்தரஞ் சேரல்எனவும் குறிப்பர்.
திணை: வாகை. 
துறை: அரச வாகை


இருமுந்நீர்க் குட்டமும் 
வியன்ஞாலத் தகலமும் 
வளிவழங்கு திசையும் 
வறிதுநிலைஇய காயமும், என்றாங் 
கவையளந் தறியினு மளத்தற் கரியை 

அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும் 
சோறுபடுக்குந் தீயோடு 
செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது 
பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே 
திருவி லல்லது கொலைவில் லறியார் 1

நாஞ்சி லல்லது படையு மறியார் 
திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் 
பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு 
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது 
பகைவ ருண்ணா வருமண் ணினையே 

அம்புதுஞ்சுங் கடியரணால் 
அறந்துஞ்சுஞ் செங்கோலையே 
புதுப்புள் வரினும் புழம்புட் போகினும் 
விதுப்புற வறியா வேமக் காப்பினை 
அனையை யாகன் மாறே 
மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே. 


பொருளுரை: 

பெரிய கடலின் ஆழம், அகன்ற இவ்வுலகத்துப் பரப்பு, 
வானத்தில் காற்று செல்லும் திசை மற்றும் வடிவமில்லா நிலைபெற்ற ஆகாயம் என்று சொல்லப்படுபவற்றை 
அளந்து அறிந்து கொள்ள முடியும் என்றாலும், உனது அறிவும், அன்பு கொண்ட ஈர நெஞ்சமும்,
 பரந்துபட்ட உனது கண்ணோட்டமும் இவ்வளவுதான் என்று வரையறை செய்து அளக்க முடியாத அரியவன் நீ! 

ஆதலால் உனது ஆட்சிக் குடையின் நிழலில் வாழ்வோர் சோறு சமைக்கும் நெருப்பின் வெம்மையும், 
செஞ்ஞாயிற்றின் வெம்மையும் அல்லாது வேறு வெம்மை அறியார்; அழகிய வானவில்லையன்றி பகைவரது கொலை வில்லை அறியார்; 
கலப்பையை அன்றி வேறு படைக்கலமும் அறியார். 

போர்த்திறன் அறிந்த வீரர்களோடு சென்று பகைவர் அழிய, அந்த பகைவர் தேசத்து மண்ணை எடுத்துக் கொள்ளும் பெருமையுடைய தலைவனே! 
உனது நாட்டின் மகளிர் சூலுற்று, மசக்கையின் பொருட்டு விரும்பி உண்ணுவதல்லாது பகைவர் வெற்றி கொண்டு
உண்ணப்படாத பெருமைக்குரிய மண்ணையுடையவனே! 

அம்புகளுக்கு வேலையில்லாது அமைதி கொள்ளும் காவலையுடைய அரணுடன், 
அறமும் நிலைக்கும் செங்கோலையுடையவனே! புதுப்பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் அவ்விடத்தை விட்டுப் போனாலும் 
அவற்றால் தீய நிமித்தம் வந்ததென்று நடுக்கமுறுதல் அறியா சேமமுடைய நாட்டின் காவலையுடையவன் நீ! 

அத்தன்மையை உடையவனாதலால், உன் நாட்டில் நிலைபெற்ற மக்களெல்லாம் அவர்கள் உன் மேல் கொண்ட அன்பினால் 
உனக்கு ஏதும் தீங்கு வந்து விடுமோ என அஞ்சுகிறார்கள். 


Decription:(A Song About Seramaan Yaanaikkatchey Maandharanjcheral Irumporai)

It is possible to measure the depth of the big sea, 
the breadth of the vast world, the direction of the bowing wind and the windless sky, 
but it is impossible to measure your knowledge, kindness and mercy. 

The people who are under your righteous rue know only the hotness of the fire 
which is used for cooking food and the hotness of the red sun. 

They don't know other hotness like poverty, torture of the enemies etc. 
They know the beautiful rainbow, but they don't know the enemies' killing bows. 
They know the plough, but don't know any other weapons. 

Oh king ! You with your able soldiers capture the countries of your enemies. 

Only the pregnant ladies of your country wish to eat the soil of your land. 
Your land is not captured by your enemies. 
You are having a fort with arrows and a righteous sceptre. 


Your country has such a safety so that it does not bother about the arrival of the new birds 
and departure of the old birds. As all the living beings love you, 
they fear if some harm comes to you. 
-Kurungkozhiyoorkkizhaar


முலம்:
http://eluthu.com/kavithai/126237.html
http://thamizhanna.blogspot.in/2010/06/purananooru-16-to-25-english.html



No comments: