பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி
கடுங்கண்ண கொல் களிற்றால்
காப் புடைய எழு முருக்கிப்,
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்;
பார்உடைத்த குண்டு அகழி
நீர் அழுவம் நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்!
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.
பொருளுரை:
பெண்டிர்கள் விரும்பி வேட்கைத் துன்பம் பயக்கின்ற அழகிய அகன்ற மார்பினையும், உன்னை எதிர்த்துப் போரிடுவார்க்கு,
இறுகிய நிலத்தைப் போன்ற வலிமையுமுடைய போரில் சிறந்த முருகக் கடவுளைப் போனற ஆற்றலுடையவனே! அரசே!
கடுமையான பார்வையுள்ள கண்களையும், கொல்லும் தன்மையையும் உடைய யானையினால் பகைவரின் காவல் மரமாகிய கணைய மரத்தை உடைத்து,
இரும்பால் செய்து அழகுற அமைக்கப்பட்ட அங்குசத்தால் முன்னிலையாய்ச் செல்லும்படி செலுத்தி,
நிதானித்து இழுத்து நிறுத்தவும், கடினமான நிலத்தை குந்தாலியால் தோண்டிச் செய்த குழிந்த அகழியின் நீர்ப்பரப்பின் அகலமும்,
ஆழத்தின் அளவும் கருதிமிகுந்த திறனுடைய குதிரையின் கடிவாளம் பிடித்து வேண்டுமளவு நடத்தவும் செய்கின்றவன் நீ!
அம்பறாத்தூணியை முதுகில் பொருத்தி தேர் மேலே நின்று உனது வில்லின் வலிய நாணைப் பிடித்துப் பிடித்து
உன் கைகள் காய்த்துப்போகும்படி அம்பைச் செலுத்துவதாலும்,
எம் போன்ற பரிசு பெறுவோர்க்கு அணிகலன்களை அளிப்பதாலும் முழங்காலைத் தொடுமளவு நீண்ட உனது பெரிய கைகள் கடினமாக இருக்கும், அரசே!
புலால் மணத்தை உடைய புதிய ஊண்கறியை இனிய பூ மணமுடைய புகையால் கொளுத்தி தாளிதத்துடன் கூடிய ஊனும்
துவையலும் கலந்த அசைவமும் சோறும் சாப்பிட்டு உடலை வருத்தும் செயல் அல்லாது வேறு எந்த உடல் உழைப்புக்கான செயலும் செய்யத் தெரியாதாகலின்
தான் உன்னைப் பாடுவோருடைய கைகள் மிகவும் மெல்லியனவாக உள்ளன, பெருமானே!
Description (A Song About Seramaan Selvakkadungo Vaazhiyaadhan)
Oh King! You have the strength to control the killing male elephant which has angry eyes
and which destroys the pillar to which it is tied.
It is controlled with thotti which is made up of gold and it obeys to your orders.
You have the strength to drive the horse so that it jumps off the big pits which are filled with water.
You have the back which has an alabaster.
Standing on the chariot you are capable of sending arrows
by bending the bow which rests in the scar made by the chord of the bow.
Your hands which are up to the knee which gives valuable ornaments to the poor are strong.
We eat the food by roasting meat with fat in the sweet smelling smoke.
We don't know other jobs except eating. Oh lord!
You have broad chest which gives unquenchable desire to ladies.
You have strength like the big earth to your enemies.
You win the wars like god Murugan.
Our hands know only eating, so they are soft. -Kapilar
No comments:
Post a Comment