Thursday, January 29, 2015

மஞ்சள்

கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.

வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.

மெட்ராஸ் ஐ வந்தால், தூயவெள்ளைத்துணியை மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, கண்களில் அடிக்கடி ஒற்றி எடுத்தால், கண்வலி, நீர்கோத்தல் தீரும்.

கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள், வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக ஆவிபிடிக்கலாம். சளி, இருமல், தலைபாரம் நீங்கும்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=25826

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102705

No comments: