"யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன". To us all towns are one, all men our kin, Life's good comes not from others' gifts, nor ill, Man's pains and pain's relief are from within.
Sunday, December 14, 2014
பாய்
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான உடம்பு உபாதைகள் கொண்டு இருக்கின்றார், அதை நீக்குவதற்கு நாம் தூங்கும் படுக்கை கூட உதவி செய்யும் தெரியுமா ?
படுக்கைகள் பலவிதம்.
எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும். மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும். மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும் இன்று நாம் பாய் என்பதை நமது உடல் நலம் பார்த்து வாங்குகிறோமா என்ன ?
http://www.kadalpayanangal.com/2014/12/1.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment