Thursday, October 2, 2014

விரல்கள் பற்றிய செய்திகள்

நம் கைகளில் 19 எலும்புகள் இருக்கின்றன.    பெண்ணைப்போல இரண்டு மடங்கு அதிக சக்தி ஆணுக்கு.  வேட்டையாடிக்கொண்டிருந்த காலத்தில் சூழலின் காரணமாக ஆண் பெற்ற அதிக சக்தி இன்னமும் எஞ்சி இருக்கிறது.

பிடிப்புதான் அழுத்தமே தவிர விரல்களைக்கொண்டு நுண்ணிய வேலைப்பாடுகள் செய்வதற்குப் பெண்களின் கைகளாலேயே முடியும். பியானோ இசைக் கருவியின் கீ போர்டைப் பார்த்தால் அது ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது என்பதை உணரலாம். அதை வைத்துக்கொண்டு இயக்குவது பெண்களுக்குச் சிரமம்.  அதனால்தான் பெரும்பான்மையான பியானோ இசைக்கலைஞர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். 

நம் கைகளில் முக்கியமான விரல் கட்டை விரல் : அது இருப்பதால்தான் பிடிமானம் இருக்கிறது. அந்த விரலை லத்தீனத்தில் ‘போலக்ஸ்’ என்று அழைப்பார்கள்.   

இரண்டாம் விரல் ஆள்காட்டி விரல். அதற்கு லத்தீன் மொழியில் ‘இன்டக்ஸ்’ என்று பெயர்.  , ‘சுடும் விரல்’ ,  ‘வேட்கை விரல்’, ‘நெப்போலிய விரல்’, விஷ விரல்

மூன்றாவது விரல் ‘மீடியஸ்’ என்று அழைக்கப்படுகிறது.  இவ்விரலை மட்டும் நீட்டுவது அநாகரிகமான செயல் என்பதால் இதற்கு ‘மோசமான விரல்’ என்ற அடைமொழியும் உண்டு.

 மோதிர விரல் : அந்த விரலிலிருந்து ஒரு நரம்பு  நேராக இதயத்துக்குச் செல்வதாக கருதியதால்தான் திருமணத்தின்போது ‘உன் இதயத்தையே நான் தொடுகிறேன்’ என்பதை உணர்த்த அந்த விரலில் மோதிரம் அணியும் பழக்கம் வந்தது.  மருந்து கலக்குவதற்குப் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.

காதைக் குடைய இந்த விரலையே அதிகம் பயன்படுத்துவதால். சுண்டு விரலுக்கு ‘காதுவிரல்’ என்கிற பெயரும் உண்டு. 

இஸ்லாத்தில் கட்டை விரலை நபிகள் நாயகத்துக்கும், ஆள்காட்டி விரலை ஃபாத்திமாவுக்கும், நடுவிரலை அலிக்கும், மோதிர விரலை ஹாசனுக்கும் அர்ப்பணித்திருப்பதாகவும், ஆள்காட்டி விரலை கத்தோலிக்கர்கள் புனித ஆவிக்கும், நடு விரலை ஏசுவுக்கும், அர்ப்பணித்திருப்பதாகவும் டெஸ்மன்ட் மாரிஸ், ‘நிர்வாண மனிதன்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.  கிறித்தவர்கள் மோதிர விரலை ‘ஆமென்’ என்று அழைப்பார்களாம்.  

நன்றி:விகடன்


No comments: