Wednesday, October 15, 2014

விதவிதமான டிபன் பாக்ஸ்; விபரீதம் தெரியுமா?


பிளாஸ்டிக்குகளில் இருந்து, பி.பி.ஏ., (பிஸ்பீனல்-ஏ- bisphenol-a) எனப்படும், வேதிப்பொருள் உருவாகும். இது, 'ஹார்மோன்' பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த பிரச்னைகளை உருவாக்கும்.

தொடர்ந்து பயன்படுத்துவதால், எடை கூடும், நீரிழிவு பாதிப்பு வரும். குறைந்த வயதிலேயே, பெண்கள் பூப்பெய்தி விடவும் வாய்ப்புள்ளது. 'பெட்' (பாலி எத்திலின் டேரப்தலேட்) பாட்டில் என்கிறோம். இதில், 'டை- எத்தில் - ஹைட்ரக்சில் அமைன் (டேகா) என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது. இது, புற்றுநோய்க்கான வேதிப்பொருள். பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும், வெந்நீரை ஊற்றி வைத்து பருகுவதாலும், 'டோகா' தண்ணீரில் கலந்து, உடலுக்குள் செல்கிறது; இதுவும் ஆபத்தே. 

'பி.பி.ஏ., பாதிப்பு இல்லாத, உணவுப் பொருட்களை வைத்தால், சூடாகாத பிளாஸ்டிக் டப்பாக்கள் (புட் கிரேடு) பயன்படுத்த வேண்டும். டப்பா, பாட்டில்கள் வாங்கும்போது, இதுபற்றிய குறிப்புகள் உள்ளதா என, பார்த்து, தரமானதாக வாங்க வேண்டும்.




மேலும் படிக்க:  http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22286&ncat=11

http://healthychild.org/easy-steps/know-your-plastics/
http://www.medimanage.com/my-diet/articles/water-is-good-but-the-bottles-are-not.aspx

No comments: