பண் இசைத்துப் பாடுபவன் பாணன். அவன் மனைவி பாணி. பாட்டுப்பாடி கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் அவர்கள் தொழில்.
அவர்களை வாழவைத்த தர்மப்பிரபுக்களும் அன்று இருந்திருக்கிறார்கள்.
தன் வறுமையைப் போக்க ராமன் என்கிற வள்ளலைப் பார்த்துப் பரிசில் பெற்று வீட்டுக்குள் வருகிறான் அந்தப் பாணன்.
பாணி தன் கணவன் என்ன வாங்கி வந்திருப்பான் என்ற ஆவலில் அவனிடம் கேட்கிறாள்.
“வானளவு புகழ்மிக்க இந்த மண்ணில் வாழும் வள்ளலிடம் உன் திறமைகளைக் காட்டி என்ன பரிசு பெற்று வந்திருக்கிறாய்?“
“ களபம் அளித்தார் “ என்கிறான் பாணன்.
“சந்தனமா? அது எதற்கு? பூசிக்கொள்ளவா கொடுத்தார் அந்த வள்ளல்? நாம் என்ன சந்தனம் பூசிக் கொள்ளும் நிலைமையிலா இருக்கிறோம்? அதை நீயே பூசிக்கொள்“ என்கிறாள் பாணி. களபம் என்பதற்குச் சந்தனம் என்பதும் பொருள்.
“ அய்யோ இல்லை இல்லை நீ தவறாகப் புரிந்து கொண்டாய்! அவர் கொடுத்தது மாதங்கம் “ என்கிறான் பாணன்.
“ ஓகோ நம்முடைய நிலைமையைப் புரிந்து கொண்டு நிறைய தங்கம் அளித்தானோ அவ்வள்ளல்? இனிமேல் நம் நல்வாழ்விற்குக் கவலையில்லை. நாம் நன்றாக வாழலாம் “ என்றாள் பாணி.
மேலும் படிக்க : http://oomaikkanavugal.blogspot.com/2014/09/blog-post_30.html
No comments:
Post a Comment