சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலை, முட்டுக்காட்டில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், பரந்து விரிந்திருக்கிறது அந்த மத்திய அரசு நிறுவனம். 'நிப்மெட்’ என்று சொன்னால், மாநகரப் பேருந்துகளும் வெளியூர் பேருந்துகளும் அந்த நிறுத்தத்தில் நிற்கின்றன.
அதென்ன, 'நிப்மெட்’? 'ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம்’ (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) என்பதன் சுருக்கமே 'நிப்மெட்’.
'சிறப்புக்குழந்தைகள்’ என்று அழைக்கப்படும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளைப் பெற்றவர்களின் மனவலியை எளிதில் வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. ஆனால் கண்களில் நம்பிக்கையைத் தேக்கி, இதயத்தில் உறுதியைத் தாங்கி, இங்கே வரும் பெற்றோர்களின் நம்பிக்கை வீண்போவதே இல்லை. அவர்களின் பாரத்தைக் குறைத்து, குழந்தைகளுக்குப் பயிற்சி தந்து, மறுவாழ்வு அளிக்கிறது 'நிப்மெட்’.
No comments:
Post a Comment