Sunday, August 17, 2014

இயற்கைவழி வேளாண்மைச் சான்றிதழ்


இயற்கைவழி வேளாண்மைச் சான்றிதழ்' பெறும் வழி முறைகளைப் பற்றி 'குடும்பம்’ அமைப்பைச் சேர்ந்த சுரேஷ்கண்ணா  பேசியபோது, ''இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், இதற்கான சான்றிதழைப் பெற விவசாயிகள் அதிக செலவு செய்கிறார்கள். இப்படி சான்றிதழ் அளிக்கும் வேலையை பல நிறுவனங்கள் தொழிலாகச் செய்து வருகின்றன. நுகர்வோர்க்கும் உழுவோர்க்கும் சம்பந்தமேயில்லாத மூன்றாம் நபர், நம் நிலத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் முறைதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், செலவே இல்லாமல் 'பங்கேற்பு முறை உறுதியளிப்புச் சான்றிதழ்’ மூலம் குழுவில் உள்ள உள்ளூர் மக்களே இயற்கை வேளாண் சான்றிதழ் கொடுக்கும் எளிய முறையும் உண்டு.
விவசாயிகள், நுகர்வோர், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை உள்ளடக்கிய அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் குழுக்கள் மூலம் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஐ.நா சபையின் கீழ் செயல்படும் 'ஐ ஃபார்ம்’ என்கிற 'இன்டர்நேஷனல் பெடரேஷன் ஃபார் ஆர்கானிக் அக்ரிகல்சுரல் மூவ்மெண்ட்’ என்ற அமைப்புக்கு உலகளவிலான இணைப்பு உண்டு. இந்த அமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி குழுக்கள் அமைத்துக் கொண்டு பெயர் சூட்டிக்கொண்டு... தேசிய அளவில் உள்ள ஆர்கானிக் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 5 முதல், அதிக பட்சம் 20 உறுப்பினர்கள் வரை ஒரு குழுவில் இருக்கலாம். இக்குழுவினரே இக்குழுவில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க முடியும். சான்றிதழ் தேவைப்படும் விவசாயிகளின் நிலத்தை இக்குழுவில் உள்ள இரண்டு நபர்கள் நேரில் சென்று மதிப்பீடு செய்து, சான்றிதழ் வழங்கலாம். இச்சான்றிதழை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

No comments: