Sunday, March 23, 2014

கர்ணன் திரைப்படம் பாடல்




மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

நானிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
என்று இவர்கள் எண்ணும் முன்னே
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால்இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னை கொடுப்பான் தான் உயிரும் தான் கொடுப்பான்
தயா நிதியே

No comments: