Friday, August 12, 2016

புறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்!

புறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்!

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.


பொருளுரை:

நீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும், 
அகண்ட வயல்வெளிகளில் பொழிந்தும், 
தேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும் 
அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் 
போன்றது பேகனின் கொடைத்தன்மை. 

அவன் காரணமின்றி, ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம். 
ஆனால், மதங்கொண்ட யானைகளும் வீரக் கழலணிந்த கால்களும் உடைய பேகன் 
பிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான். 

ஆகவே, அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் 
படைமடம் கொண்டவன் அல்லன்.

Description: (A Song About Vaiyaavikko Behan)

The rain will fall in the pond where there is no water and in the vast fields. 
It will fall on the barren land too. 

Like the rain Behan who has elephant army 
and has worn kazhals gives to all without knowing  their standard. 
But when he fights, he will fight with  those who are equal to him in strength. 
-Paranar


மூலம்:

http://puram400.blogspot.ie/2010/01/142.html


http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

No comments: