Thursday, August 25, 2016

இணைய வழி தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள்

http://blog.freshdesk.com/how-to-incorporate-a-us-corporation-from-outs/

https://www.chargebee.com/blog/how-to-incorporate-in-the-us-v2/


http://deducely.com/blog/how-to-incorporate-in-the-us-from-outside-the-usa-version-3

மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் இணையம்

WE LAUNCH & RE-LAUNCH THE CAREERS OF PROFESSIONALS WITH DISABILITIES, VETERANS, YOUTH, STUDENTS, WOMEN, LGBT OR ANYONE LOOKING FOR WORK OPPORTUNITIES BY CREATING NEW SKILLS, CONTEMPORARY WORK EXPERIENCE & BUSINESS INCLUSION

http://www.pstarfish.org/


Inclov is the world's first matchmaking app focusing on people with disability, and with health disorders to find love

http://www.inclov.com/


Home based therapy for speech device for speech impaired people

http://innoflaps.com/


Youth4Jobs is a Not for Profit Organization which sets up placement- linked skilling centres for youth with disability. Youth enrolled are with locomotor, speech & hearing disability and with low vision. Most of the youth are from rural areas and all are from poor families. Y4J also helps companies build an inclusive workforce.

http://www.youth4jobs.org/

Scholarship for the disability persons

http://scholarships.gov.in/#

Site which facilitate the disabled people traveling
http://planetabled.com/


Getting a job is extremely difficult for persons with disabilities. Two friends set out to build an enterprise that seeks to help with just that. Their impact enterprise v-shesh trains persons with disabilities – physical and sensory – and assists with finding a job.

http://v-shesh.com/
http://www.thehindubusinessline.com/specials/emerging-entrepreneurs/lending-a-hand-to-the-disabled/article9231247.ece

குழந்தைகளுக்கான தமிழ் இணையம்/ செயலி


http://economictimes.indiatimes.com/magazines/panache/singapore-launches-mobile-app-for-tamil-language/articleshow/47489198.cms

https://play.google.com/store/apps/details?id=com.sgacee.arumbu1&hl=en

சுற்றுச் சூழல் சார்ந்த தொழில் நுட்பம்

வருகிறது பேட்டரி மோட்டார் சைக்கிள்


http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/article9016989.eceThursday, August 18, 2016

இயற்கை/ சிறுதானியங்கள் உணவு கிடைக்கும் இடம்http://tamil.thehindu.com/general/health/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8984252.ece


கரூர் மாவட்டம், நடையனூரில் இயங்கிவரும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்

திண்டுக்கல் மாவட்டத்துல ‘ஆயக்குடி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கையில் விளைஞ்ச  கொய்யா பழங்களையும் கொய்யா ஜூஸையும் தயாரிச்சு சந்தைப்படுத்துறாங்க. கோயம்புத்தூர் மாவட்டத்துல,  ‘வெள்ளியங்கிரி மலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்து அதை நேரடியா  விற்பனை செய்றாங்க

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=122686&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

ல்வராயன் மலைத்தொடருக்கும் சித்தேரி மலைத்தொடருக்கும் இடையில், அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பகுதி, சிட்லிங்கி பள்ளத்தாக்கு. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளத்தாக்கு, தர்மபுரி நகரத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சேலத்தில் இருந்தும் 75 கிலோமீட்டர் தூரம் பயணித்து இப்பள்ளத்தாக்கை அடைய முடியும். பல நூற்றாண்டுகளாக, இங்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வை வாழ்கிறார்கள், ‘மலையாளி’ பழங்குடியின மக்கள். 

http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/current-affairs/123767-story-of-300-farmers-who-turned-back-to-farming.artFriday, August 12, 2016

புறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்!

புறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்!

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.


பொருளுரை:

நீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும், 
அகண்ட வயல்வெளிகளில் பொழிந்தும், 
தேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும் 
அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் 
போன்றது பேகனின் கொடைத்தன்மை. 

அவன் காரணமின்றி, ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம். 
ஆனால், மதங்கொண்ட யானைகளும் வீரக் கழலணிந்த கால்களும் உடைய பேகன் 
பிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான். 

ஆகவே, அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் 
படைமடம் கொண்டவன் அல்லன்.

Description: (A Song About Vaiyaavikko Behan)

The rain will fall in the pond where there is no water and in the vast fields. 
It will fall on the barren land too. 

Like the rain Behan who has elephant army 
and has worn kazhals gives to all without knowing  their standard. 
But when he fights, he will fight with  those who are equal to him in strength. 
-Paranar


மூலம்:

http://puram400.blogspot.ie/2010/01/142.html


http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

நலம் வாழ : உணவுப் பற்றி தெரிய வேண்டுய செய்திகள்

கறுப்பு உளுந்து:

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.

http://tamil.thehindu.com/general/health/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8952399.ece


100 சதவிகிதம் ஆர்கானிக்
ஆர்கானிக்95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும்

மேட் வித் ஆர்கானிக்இது 70 சதவிகிதம் ஆர்கானிக் உணவு.
ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ்இதில், 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருள் இருக்கும்

நேச்சுரல்இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவற்றுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகாரச் சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது
ஃபேர் ட்ரேடுஎன்.ஜி.ஓ-க்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படும் பொருட்கள்.
ஆர்கானிக் பை ட்ரஸ்ட்சுய சான்றிதழ் 
ஏபிஇடிஏ (Agricultural and Processed Food Products Export Development Authority) எனும் மத்திய அரசு நிறுவனம் ஆர்கானிக் பொருட்களுக்கான தரச் சான்றிதழை வழங்குகிறது
http://www.vikatan.com/doctorvikatan/2016-sep-16/food/122823-things-to-know-about-food-labels.art

நாம் உட்கொள்ளும் அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எளிய கார்போஹைட்ரேட்(Simple), கூட்டு கார்போஹைட்ரேட் (complex) என இரண்டு வகையில் மாவுச்சத்து கிடைக்கிறது.  கூட்டு கார்போஹைட்ரேட்டை நல்ல கார்போஹைட்ரேட் என்று சொல்வார்கள். இதன் மூலக்கூறு அமைப்பு, நார்ச்சத்து உள்ளிட்டவை காரணமாக செரிமானம் ஆக நம்முடைய உடல் அதிக செயலாற்ற வேண்டியிருக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பது இல்லை.
https://senthilvayal.com/2016/10/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95/


Wednesday, August 10, 2016

புறநானூறு - 141. மறுமை நோக்கின்று!

புறநானூறு - 141. மறுமை நோக்கின்று!

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண். 
துறை: பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம்.


பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்

யாரீ ரோஎன வினவல் ஆனாக்
காரென் ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே


பொருளுரை:

வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் 
கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!) 
“ உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! 

நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; 
உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள். 

விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, 
நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! 
நீங்கள் யார்?” என்று கேட்கிறாயோ?

வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு 
முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். 
இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.

எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும் 
தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும் 
செருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை 
எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். 

அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது


Description: (A Song About Vaiyaavikko Behan)

We who look like the Paanaas have worn golden lotuses on our heads. 
Our Viraliyar have worn golden jewels. We have untied the horses from the chariot 
and are in the forest area happily as we are in our home. 

Oh poets ! Do you want to ask who are we ? We are also like you. 
We with our relatives suffered a lot than you before seeing Behan. 
Now our condition has changed because of the gifts given by Behan. 

Though he knew that the peacock did not cover its body with a shawl,
he gave his shawl to it. 

He will give in large quantities to many. 
He does not give expecting fame and benefits in the next birth. 
He gives knowing the poverty of the people. So you go and get gifts. 

-Paranar


மூலம்:

http://puram400.blogspot.ie/2010/01/141.html


http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html


Friday, August 5, 2016

புறநானூறு - 140. தேற்றா ஈகை!

புறநானூறு - 140. தேற்றா ஈகை!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் விடை. 


தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம்சில

அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலில் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்

போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே?

பொருளுரை:

நடுவு நிலைமை தவறாத புலவர்களே! பெரிய பலா மரங்களையுடைய 
நாஞ்சில் நாட்டு அரசன் நிச்சயமாக ஒரு மடையன்! 
வளையல் அணிந்த விறலியர், தோட்டத்தில் பறித்த கீரையைச் சமைத்த பொழுது, 
அக்கீரையின் மேல் தூவுவதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டர்கள். 

தான் பரிசிலருக்கு உதவும் முறையை அறிதலால் என் வறுமையைல் கருதாமல், 
தன் தகுதியை எண்ணி, பெரிய காடுகள் சூழ்ந்த மலைபோன்ற ஒரு யானையை அளித்தான். 

இப்படி ஆராயாது அளிக்கும் ஈகையும் உண்டோ? 
பெரியவர்கள் தங்கள் கடமையைச் சிந்தித்துச் 
(செய்யும் முறையைப் பாதுகாத்துச்) செய்ய மாட்டர்கள் போலும்!


Description:(A song About Naanjil Valluvan)

The Naanjil hill is very high. 
There are many jack trees. 

Oh poets having tongues which sing great Thamizh songs ! 
It seems that Naanjil Valluvan is a fool who cannot know the truth. 

He gives an elephant which looks like a hill as a gift to those 
who come to get some rice to cook. 

What an ignorance ! It seems that there will be such gifts in this world. 
Will not the bgreat people do their duties knowing the right way ? 
-Awvaiyaarமூலம்:

http://puram400.blogspot.ie/2010/01/140.html

http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

Wednesday, August 3, 2016

காய்கறிகள் உற்பத்தி செய்யும் இடம்

புளி

தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் புளி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்

சேலம், ‘லீ பஜார்’ல இருக்கிற புளி மார்க்கெட்தான் விற்பனைக்கு முக்கிய சந்தை

தர்பூசணி:

தஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள மின்னாத்தூர் என்ற கிராமத்தில்தான் ஜேசுவின் நிலம் உள்ளது
நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணியை விதைக்கலாம். இந்த மாதங்களில் விளைச்சலும், விற்பனை வாய்ப்பும் நன்றாக இருக்கும். ஜூன் மாதத்துக்கு முன்பே அறுவடையை முடித்து விட வேண்டும்

கொண்டைக்கடலை:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மைய அலுவலர்களிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கொண்டைக்கடலைக்கு முக்கியமான சந்தையாகும்.

மந்தாரை:

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்துல உள்ள மலைவாழ் மக்கள். காட்டுப்பகுதியில உள்ள மந்தாரை மரத்துல இருந்து, இலைகளை சேமிச்சு, பதப்படுத்தி கப்பல் மூலமா அனுப்புறாங்க.

கத்திரிக்காய்:


இயற்கை முறையில் வெற்றிகரமாக கத்திரி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்.

வெட்டிவேர்:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதுவும் கடலூர் மாவட்டத்தில்தான் அதிகப்படியாக இந்த வெட்டிவேர் பயிரிடப்படுகிறது. நொச்சிக்காடு, நடுதிட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர்களுக்கு மேல் வெட்டிவேர் பயிர் செய்யப்படுகிறது

பகுதி நேர பணியாளர் வேலை செய்ய உதவும் இணையத்தளம்

https://www.upwork.com/

https://www.elance.com/php/landing/main/login.php

https://www.freelancer.com

http://www.flexingit.com/

Tuesday, August 2, 2016

புறநானூறு - 139. சாதல் அஞ்சாய் நீயே!

புறநானூறு - 139. சாதல் அஞ்சாய் நீயே!

பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடா நிலை.
சிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' 
என்னும் புலவரது உள்ளச் செவ்வி. சுவல்அழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்இளைஞருமே
அடிவருந்த நெடிதுஏறிய
கொடிமருங்குல் விறலியருமே

வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன்; மெய்கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர்சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் உன்னிக்

கனிபதம் பார்க்கும் காலை யன்றே;
ஈதல் ஆனான் வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே; ஆயிடை
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
அருஞ்சமம் வருகுவ தாயின்

வருந்தலும் உண்டுஎன் பைதலம் கடும்பே.


பொருளுரை:

மூட்டைகளைத் தூக்கியதால் தோள்களில் பல தழும்புகளுடைய நானும், 
(குறைந்த அளவில் தலை முடியுடைய) இளஞர்களும், நீண்ட மலைவழியில் தங்கள் கால்கள் வருந்துமாறு 
ஏறி வந்த கொடி போன்ற இடையையுடைய விறலியரும் வாழ வேண்டும். 
ஆகவே, பொய் கூற மாட்டேன்; நான் கூறுவது மெய்யே.

புறமுதுகு காட்டி ஒடாத கொள்கையையுடைய வலியோரின் 
வழித்தோன்றலே! உயர்ந்த மலைச் சிகரஙளுடைய நாஞ்சில் நாட்டுக்கு அரசே! 

பரிசில் பெறும் எண்ணத்தை மறவாமல் நாங்கள் வந்துள்ளோம். 
உன்னைப் பார்ப்பதற்கேற்ற சரியான சமயத்தை எண்ணிப் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை. 

உன் வேந்தன் (சேரன்) உனக்கு வேண்டியதெல்லாம் வழங்குகிறான். 
அவனுக்காக உயிர் விடுவதற்குக் கூட நீ அஞ்சுவது இல்லை. 

இந்நிலையில் பெரிய நிலம் இரண்டு படுவது போன்ற போர் வந்தாலும் வரலாம். 
போர் வந்தால் நீ போருக்குப் போய் விடுவாய். அவ்வாறு, நீ போருக்குச் சென்று விட்டால், 
என் குடும்பமும் நானும் வறுமையால் வருந்துவோம். 
ஆகவே, இப்பொழுதே எங்களுக்குப் பரிசளிப்பாயாகDescription:(A Song About Naanjil Valluvan)

The youths having small tied up hair and the Viraliyar 
who have creeper like waist  are waiting for a long time to get your gift. 

I won't lie  to get gifts from you for their living. 
I am telling the truth . 
You are the successor  of a dynasty which never retraces in a war. 
Oh lord of the Naanjil hill ! My poverty does not allow me wait until you give gifts to me. 
Your Seraa king is ready to give whatever you need. 
You are ready to give your life itself to the Seraa king . 

If a war comes suddenly and if you go to the war, 
myself and my relatives cannot wait for the gift which will be given by you after the war. 

So before the war, you give up the gifts and remove our hunger. 
-Marudhan Ilanaahanaar


மூலம்:

http://puram400.blogspot.ie/2010/01/139.html

http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

Monday, August 1, 2016

புறநானூறு - 138. நின்னை அறிந்தவர் யாரோ?

புறநானூறு - 138. நின்னை அறிந்தவர் யாரோ?

பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: பாணாற்றுப் படை. 

ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்

சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண!
நீயே பேரெண் ணலையே; நின்இறை
மாறி வாஎன மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து

மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

பொருளுரை:

பசுக்களின் கூட்டம் மிகுந்த வழிகளைக் கடந்து, 
மான் கூட்டங்கள் நிறைந்த மலைகளைக் கடந்து, 
மீன்கள் மிகுந்த பல நீர்த்துறைகளை நீந்திப் பரிசு பெறலாம் என்ற எண்ணத்தோடு 
வளமான இசை எழுப்பும் சிறிய யாழுடன் கந்தைத் துணி உடுத்தி வந்த மூத்த பாணனே! 

நீ பெரிய எண்ணங்கள் உடையவன். உன் அரசன் (நாஞ்சில் வள்ளுவன்) 
’மற்றொரு நாள் வா’ என்று கூறி உனக்குப் பரிசளிக்காமல் உன்னை அனுப்ப மாட்டான். 

தழைத்த, கரிய கூந்தலும் தேர்ந்தெடுத்த அணிகலன்களும் 
உடையவளின் கணவனாகிய நாஞ்சில் வள்ளுவன், 
கிளிகள் தங்கியிருக்கும் பெரிய தினைப்புனத்தில் உள்ள மரப் பொந்தில் 
வைக்கப்பட்ட பெரிய நெற்கதிரைப் போன்றவன். 

அங்கு, கிளிகள் வேண்டும் பொழுது சென்று அவற்றைத் தின்னலாம். 
அதுபோல் நாஞ்சில் வள்ளுவனிடத்துப் பரிசிலர் பலமுறை செல்லலாம். 
ஆகவே, நீ முன்னர் வந்ததை அறிந்தவர் யார்?


Description:(A Song About Naanjil Valluvan)

Oh old Paanaa ! 
You have come through the forest way where there are cow herds, 
the hilly way where there are flock of deers and the river way where there are  a lot of fish. 
You have come with a small yaazh , wearing rags. 

You have come with a desire to get gifts. You have a high thought. 
The lord whom you wish to sing never says, “I have nothing today. So you go and come tomorrow.“ 
He is the husband of the beautiful lady who has dense, dark hair. 
He is like the ear kept by the parrot in a tree hole. 

When you return after getting the gifts from him , 
none can recognize you that you were that old Paanaa in  rags. 
Your appearance will be totally changed then. 
-Marudhan Ilanaahanaar


மூலம்:

http://puram400.blogspot.ie/2010/01/138.html


http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html


விடுதி தேட உதவும் இணையம்

http://www.studentacco.com/    மணவர் விடுதி,  விடுதி