Friday, July 15, 2016

புறநானூறு - 133. காணச் செல்க நீ!

புறநானூறு - 133. காணச் செல்க நீ! பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பின் அல்லது காண்புஅறி யலையே; காண்டல் வேண்டினை ஆயின் மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி உளரக் கலவ மஞ்ஞையின் காண்வர இயலி மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே! பொருளுரை: மெல்லிய இயல்புடைய விறலியே! நீ நல்ல புகழைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்; ஆனால், அத்தகைய புகழுடையவரைக் கண்டிருக்க மாட்டாய். அத்தகைய புகழுடையவரைக் காண விரும்பினால், உன் பெருமைக்குரிய மணம் வீசும் கூந்தல், மயில் தோகை போல் மலைக் காற்றில் அசையுமாறு காட்சி அளிக்கும் வகையில் நீ நடந்து, மழை போன்ற வள்ளல் தன்மையோடு தேர்களைப் பரிசாக வழங்கும் ஆயைக் காணச் செல்க Description: (A Song About Vel Aai Andiran) Oh lady with soft nature ! You should have heard the good qualities of Aai but you should not have seen him. If you wish to see him go with your sweet smelling hair which moves in the wind , like the dancing peacock. If you go like that you can see Aai who will give you like the rainy cloud. So you go to see him. -Uraiyoor Eanychcheri Mudamosiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/12/133.html

No comments: