Tuesday, June 7, 2016

புறநானூறு - 117. தந்தை நாடு!

புறநானூறு - 117. தந்தை நாடு!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்

ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்

ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே

பொருளுரை:

சனி சில இராசிகளிலிருந்தாலும், 
வால் நட்சத்திரம் தோன்றினாலும், 
சுக்கிரன் தெற்கு நோக்கிச் சென்றாலும் 
உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து 
தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. 

அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலத்திலும், 
பறம்பு நாட்டில் வயல்களில் விளைவு மிகுந்திருக்கும்; 

புதர்களில் பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும்; 
வீடுகளில் கன்றுகளை ஈன்ற பசுக்கள் 
தங்கள் கன்றுகளை விருப்பத்துடன் நோக்கும் கண்களோடு 
நல்ல புல்லை நிரம்பத் தின்னும்; 

செம்மையான ஆட்சி நடைபெறுவதால் 
சான்றோர்கள் மிகுதியாக இருப்பர்; 
புன்செய் நிலங்களில்கூட மழை தவறாமல் பெய்யும். 
பூனைக்குட்டியின் முள்போன்ற பற்களை போன்றதும், 
பசுமையான முல்லை அரும்பு போன்றதும் 
ஆகிய பற்களை உடைய, 
அழகிய வளையல்களை அணிந்த பாரி 
மகளிரின் தந்தையின் நாடு அவன் ஆட்சிக் 
காலத்தில் வளம் குன்றாமல் இருந்தது. 

ஆனால், இன்று வளம் குன்றியது


Description: (A Song About Vel Paari)

Though the black Saturn  appears with smoke, 
darkness spreads in all directions, 
Venus moves towards south, 
the  fields are yielding rich, 
flowers blossom on the bushes, 
the mother cows craze the grass stomachful as there is righteous rule. 

There are so many scholars, the rain never fails, 
the buds of  mullai are like the teeth of the young cat. 
The father of these girls who have worn beautiful bangles is Paari. 
This Parambunaadu belongs to Paari. 
But now it has lost all its fertility and has become a barren land. 
-Kapilar

முலம்:

No comments: