Tuesday, May 3, 2016

புறநானூறு - 90. புலியும் மானினமும்!

புறநானூறு - 90. புலியும் மானினமும்!


பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. 
துறை: தானை மறம். 


உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய


இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய,
அரிமணல் ஞெமரக், கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?

எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீகளம் புகினே?

பொருளுரை:

உடைந்த வளையல்களைப் போல் மலர்ந்த வெண்காந்தளும், 
இலைகள் நிறைந்த காட்டு மல்லிகையும் மணக்கும் மலைச்சரிவில் 
வலிய புலி தாக்கின் மான் கூட்டம் அங்கே எதிர்த்து நிற்குமோ? 

கதிரவன் சினந்தெழுந்தால், மயங்கிய ஆகாயத்திலும் மற்ற திசைகளிலும் இருள் சூழ்ந்து இருக்குமோ? 
பாரம் மிகுதியால் பண்டங்களைச் சுமந்து செல்லும் வண்டியின் அச்சு தரையில் இடித்துச் செல்லவும், 
நீரலைகளால் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும் கல் பிளக்கவும் 

பெருமிதத்தோடு வண்டியை இழுத்துச் செல்ல வல்ல 
காளைக்குப் போக முடியாத வழியும் உண்டோ? 
முழந்தாள் வரை நீண்ட, கணையமரம் போன்ற, 
குற்றமற்ற வலிய கைகளையுடைய மழவர் தலைவனே! 
நீ போர்க்களம் புகுந்தால் உன் பெரிய நிலத்தை கவர்ந்து 
கொண்டு ஆரவாரம் செய்யக்கூடிய வீரரும் உளரோ?

Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)
Is there a flock of deer which stood against the strong tiger when it springs 
with angry in the slope of the mountain 
where kaandhal flowers(looking like broken bangles) 
and kulavi flowers are smelling. 

If the sun has risen with shining rays, 
will there be darkness in the sky and in the eight directions ? 
Is there any hard way for a bull which has the strength of dragging 
a cart which is loaded heavily so that the axle is broken? 
-Avaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/07/90.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html



No comments: