Friday, May 20, 2016

புறநானூறு - 105. தேனாறும் கானாறும்!

புறநானூறு - 105. தேனாறும் கானாறும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: விறலியாற்றுப்படை. 

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினும் அருவி

கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக
மால்புடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.

பொருளுரை:

ஒளி பொருந்திய நெற்றியையுடைய விறலி! 
பெரிய நீர்ச்சுனைகளில் தழைத்த கரிய இதழ்களுடைய 
குவளையின் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் 
குளிர்ந்த மழைத்துளிகள் கலக்குமாறு மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், 

மேகங்கள் மோதுகின்ற நெடிய பறம்பு மலையின் 
சிகரங்களிலிருந்து வரும் அருவிகளின் நீர், 
கொள் விளைப்பதற்காக உழுத வயல்களில் வாய்க்காலாக ஓடி வருகிறது. 

அந்த நீரினும் மிகவும் இனிய தன்மை வாய்ந்தவன் வேள் பாரி. 
நீ அவனை பாடிச் சென்றால் சிவந்த பொன்னாலான அணிகலன்களைப் பெறுவாய்.

”மால்புடை நெடுவரைக் கோடுதொறும்” என்பதற்கு ”கண்ணேணியையுடைய 
நெடிய மலையினது சிகரங்கள் தோறும்” என்றும் பொருள் கொள்ளலாம்.


Description:(A Song About Vel Paari)

Oh Virali having beautiful forehead ! 
You will get valuable ornaments. 

The honey drops which come from the blue flowers in the big pond 
run through the ploughed land though the rain falls or not. 

The water falls from the hill with bamboos run as rivers. 
You sing the praise of the patron Paari. 
His sweetness is greater than these. 

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/09/105.html

http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

No comments: