Saturday, May 14, 2016

புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்!

புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்!

பாடியவர்: அவ்வையார்,
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடா நிலை. 


ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;
அருந்தஏ மாந்த நெஞ்சம்!

வருந்த வேண்டா வாழ்கவன் தாளே!

பொருளுரை:

நாம் ஒரு நாள் அல்லது இருநாட்கள் செல்லவில்லை; 
பல நாட்கள் தொடர்ந்து பலரோடு நாம் (அதியமானிடம் பரிசில் பெறுவதற்குச்) சென்றாலும், 
அதியமான் முதல் நாள் போலவே நம்மிடம் விருப்பமுடையவனாக இருக்கிறான். 

அழகிய அணிகலன்கள் அணிந்த யானைகளையும் நன்கு செய்யப்பட்ட 
தேர்களையும் உடைய அதியமான் பரிசளிப்பதற்குக் காலம் தாழ்த்தினாலும் 
தாழ்த்தாவிட்டாலும், யானை தன் கொம்புகளிடையே கொண்ட உணவுக் கவளத்தை 
உண்ணத் தவறாதது போல், அதியமானிடமிருந்து நாம் பெறப்போகும் பரிசில் 
நம் கையில் இருப்பதாகவே நாம் நம்பலாம். பரிசு பெறுவதற்கு ஆசைப்பட்ட நெஞ்சே! 
வருந்த வேண்டாம்! வாழ்க அவன் திருவடிகள்!


Description:(A Song About Adhiyamaan Nedumaan Anji)

We did not go for a single day. 
We did not go for two days. 
We went several days with several people. 

But he received us with the same desire which was on the first day. 
He has elephants with golden ornaments on their foreheads and beautiful chariots. 
Though he delays to give gifts or not, like the food that is kept in between the tusks of the elephant, 
it is sure that we can get it. Oh heart ! 

Don't worry. Let his feet long live. 
-Avaiyaar



முலம்:
http://puram400.blogspot.in/2009/09/101.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

No comments: