Tuesday, April 19, 2016

புறநானூறு - 81. யார்கொல் அளியர்?

புறநானூறு - 81. யார்கொல் அளியர்?

பாடியவர்: சாத்தந்தையார்
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
திணை:வாகை 
துறை: அரசவாகை 


ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்

கவிகை மள்ளன் கைப்பட் டோரே?

பொருளுரை:

கோப்பெரு நற்கிள்ளியின் படையினது ஆரவாரம் ஏழு கடலும் கூடி எழுப்பும் ஒலியைவிடப் பெரிது. 
அவனுடைய யானை கார்காலத்து மழையோடு கூடிய இடியினும் அதிகமாக முழங்குகிறது. 

கோப்பெரு நற்கிள்ளி நாரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட 
ஆத்தி மாலையையும் இரவலர்க்கு ஈகை செய்து கவிந்த கையும் உடைய வீரன். 
அவன் கையில் அகப்பட்டோரில் யார்தான் இரங்கத் தக்கவர்? 
அவன் யாருக்கும் இரக்கம் காட்டப்போவது இல்லை. 
அனைவரும் கொல்லப்படுவது உறுதி


Description: (A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

The sound made by Narkkilli was bigger than the noise produced by the seven seas. 
His elephant would trumpet like the thunder of the rainy season. 
Narkkillihas aaththi garland and has heaped hands which will give to the poor.
Those who died in his hands were pitiable. 

-Saaththandhaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/06/81.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html


No comments: