Monday, April 11, 2016

புறநானூறு - 76. அதுதான் புதுமை!

புறநானூறு - 76. அதுதான் புதுமை!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை :வாகை. 
துறை: அரச வாகை. 

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரள்அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்

நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்

பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!


பொருளுரை:

ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; 
அது இவ்வுலகத்து இயற்கை. ஊர்ப்பொதுவில் உள்ள திரண்ட அடிப்பாகத்தை உடைய வேப்ப மரத்தின் 
பெரிய கிளையின் ஓளி பொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் கலந்து 
நெருக்கமாகத் தொடுத்த தேன் மிக்க மாலையை வளைய மாலையுடன் சிறப்பாகச் சூடி, 
இனிய போர்ப்பறை ஒலிக்கக் கண்ணுக்கு இனிய பசும்பொன்னாலான அணிகலன்களை அணிந்த நெடுஞ்செழியனின் 
செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், 

கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு 
தான் ஒருவனாக நின்று போர்க்களத்தில் அவர்களை அழித்ததை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை




Description:(A Song About Thalaiyaalangkaanaththu Seruvendra Paandiyan Nedunjchezhiyan)
It is not new but it is nature one killing another and one running away from another being defeated. 
But it is new to the world that Paandiyan Nedunjchezhiyan who has worn the leaves 
of the neem tree together with uzhingai flowers stood alone and 
defeated Seran, Sozhan and five Velirs who came to fight with him not knowing his strength. 
It is a wonder which we do not hear. -Idaikkundroor Kizhaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/04/puranaanuuru-poem-74.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: