Sunday, April 3, 2016

புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும்!

புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும்!

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். 
துறை: பாணாற்றுப்படை. 

உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து
ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து

அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் 
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்

மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்

கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.


பொருளுரை:


பாண! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல், 
உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? 
அணிகலன்களை அணிந்த, அழகிய, பெரிய, மார்பில் சிவந்த புள்ளிகளை (தேமல்) உடையவன் நலங்கிள்ளி. 
அவன் மென்மையான மகளிரிடம் பணிவாகவும், 

வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன். 
அவன், குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல், நீர்ப் பெருகிய காவிரி, வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன். 
தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால், 
பறவைகளால் நிகழும் தீய நிமித்தங்கள் நடைபெறும் பொழுது, 
அப்படையைப் போருக்குச் செலுத்துவதை நிறுத்திவிடுவான். போருக்குச் செல்ல இயலாதலால், அந்தப் படைவீரர்கள், 
“ செத்து விடுவோம்” என்று கூறித் தங்கள் பருத்த தோளைத் தட்டுவர். 

அவர்கள் ஆத்திரம் தணிவதற்குத் தேரோடும் தெருக்களில், 
தாழ்ந்த ஒலியில் பறையை முழக்குவர். 
அவர்களில் சிலர், நன்கு முதிர்ந்த கள்ளைப் பருகியதால் நடுங்கும் கைகளால் அக்கள்ளைச் சிந்துவர். 
கள் சிந்தியதால், சேறாகிய தெருக்களில் பாகர்கள் இல்லாமல் திரியும் யானைகள் பெரிய நகரில் ஒலிக்கும் முரசொலியைக் காது கொடுத்துக் கேட்கும். 
அத்தகைய உறையூரில், சோழன் நலங்கிள்ளி உள்ளான். 
நீ அவனிடம் சென்றால், அதற்குப் பிறகு வேறு யாரிடத்தும் செல்வதை மறக்கும் அளவுக்கு பரிசளிப்பான்.


Description:(A Song About Sozhan Nalangkilli)

Oh Paanaa ! You are playing your yaazh and singing a song which can be enjoyed by a few. 
You don't see people who quench your relatives' cruel hunger who are like the skeleton of the monitors. 

What are you doing here ? The Sozha king obeys the soft ladies who wear golden jewels on their chests, but he controls the strong men. 
Like the milk that springs in the mother's breast when the child sucks, the river Kaaviri flows in the Sozhanaadu. 
It has no inner enmity. There is no enmity due to the bad omens of the birds. 
So the enemies decided to fight in between themselves and to die. 
As they drove the chariot beating the drums, the drunkards' trembling hands make the toddy spilt on the ground. 
The spilt toddy makes the soil muddy. On hearing the sound of the drum, the elephants without mahouts stand in the mud to fight. 
Our noble king has braveness. He lives in Uraiyoor. You go to him. 
He is the only one who can give much wealth so that you need not go others' houses and sing. -Kovoorkkizhaar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/68.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html


No comments: