Saturday, April 2, 2016

புறநானூறு - 67. அன்னச் சேவலே!

புறநானூறு - 67. அன்னச் சேவலே!

பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்,
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் 

மையல் மாலையாம் கையறுபு இனையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ

வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.


பொருளுரை:


அன்னச் சேவலே! அன்னச் சேவலே! 
கொல்லும் போரில் வெற்றி பெற்று, 
நாட்டை அருள் செய்து காக்கும் மன்னனின் ஒளிதிகழும் முகம் போல், 
இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி, 
முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், 
நான் செயலற்று வருந்துகிறேன். 

நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, 
வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், 
இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில் உள்ள உயர்ந்த மாடத்தில் 
உனது பெட்டையோடு தங்கி, வாயில் காவலரைக் கடந்து, 
அரண்மனைக்குள் புகுந்து, கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, “ நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன்” என்று சொன்னால், 
பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத் 
தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான்.




Description:(A Song About Kopperunjchozhan)

Oh male annam ! Oh male annam ! 
The full moon is shining in the country of the king who gets success in wars. 

In this evening I am suffering alone. You have eaten the ayirai fish in the Kumari and going to the Himalayas. 

If you go to the Sozhanaadu on your way, you stay in the high storey of the Uraiyoor with your young mate. 
You go through the entrance and enter into the palace. 
You tell to Kopperunjchozhan that you are the servant of Aandhaiyaar of Pisir. 
If you say like that, he will give many good ornaments for your mate to wear. -Pisir Aandhaiyaar




முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/67.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html

No comments: