Thursday, April 28, 2016

புறநானூறு - 87. எம்முளும் உளன்!

புறநானூறு - 87. எம்முளும் உளன்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை. 
துறை; தானை மறம். 

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.


பொருளுரை:

பகைவர்களே! போர்க்களம் புகுதலைத் தவிருங்கள்; 
எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கிறான். 

அவன், ஒரு நாளில் எட்டுத் தேர்கள் செய்யும் தச்சன் ஒருவன், 
ஒரு மாத காலம் கருத்தோடு செய்த தேர்க்காலைப் 
போன்ற திண்மையும் விரைவும் உடையவன்.

Description:(A Song About Adhiyamaan Nedumaan Anji)
Oh enemies ! Don't enter into the battle field. 
There is a great warrior among us too. 
He has the strength of the wheel of a chariot 
which is made in a month by a carpenter 
who is capable of making eight chariots in a day. 
-Avaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/07/87.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Wednesday, April 27, 2016

புறநானூறு - 86. கல்லளை போல வயிறு!

புறநானூறு - 86. கல்லளை போல வயிறு!

பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம். பாடப்பட்டோன்
திணை: வாகை 
துறை: ஏறாண் முல்லை


சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!

பொருளுரை:

சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, 
“உன் மகன் எங்கே உள்ளான்” என்று கேட்கிறாய். 

என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன். 
புலி தங்கிச் சென்ற குகையப் போல் அவனைப் பெற்ற வயிறு இது. 

அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு போய்ப் பார்.


Description:(A Song Written By Kaavarpendu)

Oh lady ! You come to my small house. 
You touch the pillar and ask me, “Where is your son ? “ 
I don't know where he is. Like the cave in which a tiger has lived, 
this is the womb which gave birth to him. 

He will certainly appear in the battle field.


முலம்:
http://puram400.blogspot.in/2009/07/86.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Monday, April 25, 2016

புறநானூறு - 85. யான் கண்டனன்!

புறநானூறு - 85. யான் கண்டனன்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை 
துறை: பழிச்சுதல்.


என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
"ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே;
"ஆடன்று" என்ப, ஒருசா ரோரே;

நல்ல பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.


பொருளுரை:

என் தலைவன் இவ்வூரைச் சார்ந்தவன் அல்லன்; 
இந்த நாட்டைச் சார்ந்தவனும் அல்லன். 

ஆகவே, என் தலைவனுக்கும் மல்லனுக்கும் இடையே நடைபெறும் மற்போரைப் பார்ப்பவர்களில், 
ஒரு சாரார் நற்கிள்ளிக்கு “வெற்றி, வெற்றி” என்பர். 

மற்றொரு சாரார் அவனுக்கு வெற்றி இல்லை என்பர். 
நல்லவர்களாகிய பலரும் கூறும் இருவகையான கூற்றுக்களும் நன்றாகவே இருந்தன.
 (ஆனால், என்னால் அங்கே இருக்க முடியவில்லை.) 

நான் என் அழகிய சிலம்புகள் ஒலிக்க ஓடி வந்து என் வீட்டில் முரசு போல் 
அடிமரம் பருத்த பனைமரத்தில் சாய்ந்து நின்றவாறு அப்போரில் 
என் தலைவன் வெற்றி பெறுவதைக் கண்டேன்.


Description:(A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

It is not the village of my lord. 
It is not the country of my lord. 

Some say that he has won. 
Some other say that he has not won. 

But I ran so that my silambu made noise. 
I stood below the palm tree which has pot like foot and saw the victory of Narkkilli over Mallan. 
-Perungkozhi Naickkan Mahal Nakkannaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/07/85.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Sunday, April 24, 2016

நாட்டுக்காய்கறிகள் - நாட்டுப்பழங்கள்

நாட்டுக்காய்கறிகள்

கத்திரி, முருங்கை, வெண்டை, பரங்கிக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கொத்தவரங்காய், அவரை, துவரை, முள்ளங்கி, பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய் எனக் கடைசியில் ‘காய்’ என முடியும் எல்லாமே நம் ஊர் பாரம்பரியக் காய்கறிகளே. மார்க்கெட் மதிப்புக் குறைவாக இருப்பதால், கொத்தவரங்காய், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவை அதிகம் பயிரிடப் படுவதில்லை.

நாட்டுப்பழங்கள் எவை?

கொய்யா, மாதுளை, சீதாப் பழம், தர்பூசணி, சப்போட்டா, எலுமிச்சை, எலந்தை, நாவல், மாம்பழம், பலாப்பழம், வாழை, அன்னாசி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்சு போன்றவை நம் ஊரில் விளையும் பழங்கள். 
மொந்தன் வாழைப்பழம் பார்க்க அழகாக இல்லை, தோற்றம் சரி இல்லை என்பதற்காகவே சரியாக விற்பனையாகாததால், இவை அதிகமாகப் பயிரிடப்படுவது இல்லை. இதில் உள்ள சத்துக்களோ ஏராளம். இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்துக்கு ஏற்றது.

முலம்:

http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=118118


Saturday, April 23, 2016

புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!

புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. 
துறை: பழிச்சுதல்


என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்

ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!


பொருளுரை:

என் தலைவன், கூழ் போன்ற உணவை உண்டும் பெரிய தோளை உடையனாக உள்ளான். 
நான் அவன் இருக்கும் இடத்திற்கு அருகிலிருந்தும் (அவனோடு கூட முடியாமையால்) பசலையால் பொன்னிறமானேன். 

போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், ஒலிமிக்க விழாக்கோலம் கொண்ட இவ்வூரில், 
செருக்குடன் போருக்கு வரும் வீரர்களின் நிலைமை, 
உப்பு விற்கப் போகும் உமணர்கள் தாங்கள் செல்லும் கடினமான வழியை நினைத்து அஞ்சுவார்களே, 
அதே நிலைமைதான்.


Description:(A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

Though my lord is in poverty so that he eats porridge, he has big shoulders which make the enemies fear. 
Though I have the chance of seeing him from a nearby place, 
I have gold like pasalai on my body as I cannot enjoy him. 

If my lord goes to the battle field, 
he will make the proud warriors to tremble like 
the salt vendors fearing to go through a lonely way where the war has taken place. 
-Perungkozhi Naickkan Mahal Nakkannaiyaar



முலம்:
http://puram400.blogspot.in/2009/07/84.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Thursday, April 21, 2016

புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!

புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. 
துறை: பழிச்சுதல். 


அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்

ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!


பொருளுரை:

கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல்
நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. 

ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். 
அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. 
ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன்.

 நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; 
மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். 

அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், 
நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் 
ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.

Description: (A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

I afraid that I am becoming lean on thinking Kopperu Narkkilli, 
who has brave kazhals on his legs and ink like black beard. 

My bangles will leave me and reveal my love to my mother. 
I wish to embrace his big shoulders which make enemies to run back. 

But, alas ! I am afraid of the big court in between us. 
I am confused by two .i.e my mother and the court. 
Let the village also suffer like me. 

-Perungkozhi Naickkan Mahal Nakkannaiyaar





முலம்:
http://puram400.blogspot.in/2009/06/83.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Wednesday, April 20, 2016

புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்!

புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்!

பாடியவர் :சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை. 
துறை: அரசவாகை.

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று
உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ

ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!


பொருளுரை:

ஊரிலே விழா தொடங்கிவிட்டது; அங்கு போக வேண்டும். 
மனைவிக்குக் குழந்தை பிறக்கும் நேரம்; வீட்டிற்குச் சென்று அவளுக்கு உதவ வேண்டும். 

மழை பெய்கிறது; கதிரவன் மறையும் மாலைக் காலமும் வந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் கட்டிலைப் பின்னிக்கொண்டிருக்கும் தொழிலாளியின் (புலையன்) 
கையிலுள்ள ஊசி எவ்வளவு வேகமாக (கட்டில் பின்னும்) தோல் வாரைச் செலுத்துமோ,
அவ்வளவு விரைவாக, ஆத்தி மாலை சூடிய பெரியோன் கோப்பெரு நற்கிள்ளி ஊரைத் 
தன்வசமாக்கிக்கொள்ள வந்த மற்போர் வீரனுடன் போர் நடத்தினான்.


Description: (A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)
The Pulaiyan thinks that he has to go and help for the festival in his native. 
He has to go to see his wife who has gone for delivery. The rain is also raining . 
The evening is also passing fast. 
In that situation the needle in his hand sends the strap to make the cot speedly. 

The war between Narkkilli who has worn aaththi garland and 
Aamoor Mallan who came with a desire of getting back 
Aamoor defeating Narkkilli ended very soon. 

-Saaththandhaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/06/82.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html




Tuesday, April 19, 2016

புறநானூறு - 81. யார்கொல் அளியர்?

புறநானூறு - 81. யார்கொல் அளியர்?

பாடியவர்: சாத்தந்தையார்
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
திணை:வாகை 
துறை: அரசவாகை 


ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்

கவிகை மள்ளன் கைப்பட் டோரே?

பொருளுரை:

கோப்பெரு நற்கிள்ளியின் படையினது ஆரவாரம் ஏழு கடலும் கூடி எழுப்பும் ஒலியைவிடப் பெரிது. 
அவனுடைய யானை கார்காலத்து மழையோடு கூடிய இடியினும் அதிகமாக முழங்குகிறது. 

கோப்பெரு நற்கிள்ளி நாரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட 
ஆத்தி மாலையையும் இரவலர்க்கு ஈகை செய்து கவிந்த கையும் உடைய வீரன். 
அவன் கையில் அகப்பட்டோரில் யார்தான் இரங்கத் தக்கவர்? 
அவன் யாருக்கும் இரக்கம் காட்டப்போவது இல்லை. 
அனைவரும் கொல்லப்படுவது உறுதி


Description: (A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

The sound made by Narkkilli was bigger than the noise produced by the seven seas. 
His elephant would trumpet like the thunder of the rainy season. 
Narkkillihas aaththi garland and has heaped hands which will give to the poor.
Those who died in his hands were pitiable. 

-Saaththandhaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/06/81.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html


உண்மையான திருநீறு

திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, 
அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். 

பிறகு இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி, நெருப்பில் புடம் போடவேண்டும். 

எருமுட்டை நன்கு வெந்து, தீ தணிந்த பிறகு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். 

தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிகவும் மென்மையான திருநீறு கிடைத்துவிடும். இதுதான் உண்மையான திருநீறாகும்.


முலம்:

Monday, April 18, 2016

வெளிநாட்டு மொழி கல்வியால் வரும் வேலை வாய்ப்புகள்


புறநானூறு - 75. அரச பாரம்!

புறநானூறு - 75. அரச பாரம்!

பாடியவன்: சோழன் நலங்கிள்ளி
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்

சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்

நொய்தால் அம்ம தானே; மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,


பொருளுரை:


மூத்தோர் மூத்தோர்க்குரிய இடத்தை அடைந்ததால் (இறந்ததால்) முறைப்படி வந்த பழைய வெற்றிகளாலுண்டாகிய அரசுரிமயைப் பெற்றதால்
பெரிய சிறப்பை அடைந்ததாக எண்ணித் தன் குடிமக்களிடம் (அதிகமாக) வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோன் செயல் சிறந்ததல்ல.

குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்குடையையும் முரசையும் உடைய அரசாட்சி, துணிந்து போரிடும் மனவெழுச்சியும் வலிய முயற்சியும் உடையவன் பெற்றால்,
ஆட்சி செய்வது ஆழத்தில் நீர் வற்றிய குளத்தருகில் உள்ள சிறிய சுள்ளி போன்ற வெள்ளிய நெட்டி போல் மிகவும் சுமையற்றதாகும்.


Description:(A Song Written By Sozhan Nalangkilli)

To the king who demands heavy tax from his people as he got the right to rule as his elders passed away, the ruling will be a burden.
If the ruling comes to those who have strength , it will be easy like the white netti sticks which are in the dried pond.

The wealth of the king who has high white umbrella and war drum will be soft and weightless like the dried twigs.

புறநானூறு - 80. காணாய் இதனை!

 
புறநானூறு - 80. காணாய் இதனை!

பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: தும்பை.
துறை: எருமை மறம்.


இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;

நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே.

பொருளுரை:

இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை
பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து,
ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில்
அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும்
முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று
அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய
இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.


Description: (A Song About Sozhan Porvai Kopperu Narkkilli)

In the Aamoor town where there is sour toddy,
Narkkilli defeated the strong Mallan.

He placed one of his leg on his chest. With the other leg, he prevented Mallan's efforts.

Like the elephant which comes to eat the bamboo, crushes it by its feet, Narkkilli killed Mallan so that his head and legs got broken.

Thiththan, who is the father of Narkkilli has to see the skill of Narkkilli even if he wishes or not.
-Saaththandhaiyaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/06/80.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

புறநானூறு - 79. பகலோ சிறிது!

புறநானூறு - 79. பகலோ சிறிது!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை; அரசவாகை.


மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த

வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே?


பொருளுரை:


தனது பழைய நகரத்தின் வாயிற்புறத்தே உள்ள குளிர்ந்த நீருடைய குளத்தில் மூழ்கி,
பொதுவிடத்தில் உள்ள வேப்பமரத்தின் ஒளிபொருந்திய தளிர்களை அணிந்து,
தெளிந்த ஒலியுடைய பறை முன்னே ஒலித்துச் செல்ல,
அதன் பின்னர் யானையைப்போல் பெருமிதத்தோடு நடந்து கடுமையான போர் செய்யப் பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்திற்கு வருகிறான்.

அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அணியணியாகப் புதுப்புது வீரர்கள் பலர் வருகிறார்களே!
பகற்பொழுது மிகச் சிறிதே (எஞ்சி) உள்ளதால், சில பகைவர்கள் தப்பிவிடுவார்களோ?


Description: (A Song About Thalaiyaalangkaanaththu Seruvendra Paandiyan Nedunjchezhiyan)
Paandiyan Nedunjchezhiyan came to the war field after bathing in the cold pond which is near the gate of his ancient town,
wearing the tender leaves of the neem tree in the common place when the sounding marudhapparai went front,
with a brave walk like an elephant.

There were many to fight against him.
The day was short.
The evening is coming fast.
So there is a chance for some of the enemies to escape.
-Idaikkundroor Kizhaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/05/79.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Friday, April 15, 2016

புறநானூறு - 78. அவர் ஊர் சென்று அழித்தவன்!

புறநானூறு - 78. அவர் ஊர் சென்று அழித்தவன்!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை:வாகை. 
துறை: அரசவாகை. 

வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து

“விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது” என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்

மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.


பொருளுரை:

வீரக் கழல்கள் அழகு செய்யும், வலிய, நிலை தளராத கால்களையுடைய, வருத்தற்கரிய மிக்க வலிமையுடயவன் 
என் இறைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். குகையிலிருந்த புலி இரை தேடுவதற்காக 
சோம்பல் முறித்து வெளியே வருவது போல் அவன் போருக்கு வருகிறான். 

அவனுடைய வலிமையை (பொருதற்கரிய அகண்ட மார்பை) மதிக்காமல், 
“நாங்கள் சிறந்தவர்கள்; பெரியவர்கள். நம்மோடு போர் புரிய வந்திருப்பவன் இளைஞன்; 
இவனைப் போரில் வென்றால் நாம் கொள்ளை கொள்ளக் கூடிய பொருட்கள் இங்கு பெருமளவில் உள்ளன” 
என்று ஏளனத்தோடு கிளர்ந்து எழுந்து அணியணியாக 
வந்த ஒளியிழந்த கண்களையுடைய பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓட, 
அவர்களைத் தலையாலங்கானத்தில் கொல்ல விரும்பாமல், அவர்களைத் தொடர்ந்து சென்று, 

அவர்களின் மகளிர் நாணம் கொண்டு இறந்து படுமாறு, அவர்களின் 
சொந்தமான ஊர்களிலேயே தெளிந்த போர்ப்பறையொலிக்க அவர்களைக் கொன்றான்.


Description:(A Song About Thalaiyaalangkaanaththu Seruvendra Paandiyan Nedunjchezhiyan)
Our lord has the leg strength and shoulder strength which cannot be defeated. 
Like the tiger which comes from the cave in search of its prey, 
the enemies are coming without respecting the braveness of our lord thinking that they have big armies, 
the person to whom they are going to fight is very young and they will get very big treasure. 

But our lord did not kill them here. He drove them back to their native towns 
and killed them in front of their loving ladies so that they died with shame. 
-Idaikkundroor Kizhaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/05/78.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Wednesday, April 13, 2016

புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!

புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,

நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க அவன் கண்ணி! தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்றுஅயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை

வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்துநிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும்அதனினும் இலனே.


பொருளுரை:

சலங்கை கழற்றப்பட்ட கால்களில் ஒளிபொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான். 
தலைமுடி நெற்றியில் விழாமல் விலக்கிக் குடுமியாகக் கட்டப்பட்டத் தலையில் 
வேம்பின் ஒளிபொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் நெருக்கமாகத் தொடுத்துச் சூடியுள்ளான். 

சிறிய வளையல்களைக் கழற்றிய கைகளால் வில்லைப்பற்றிக்கொண்டு நெடுந்தேரின் முன் தளத்தில் அழகாக நிற்கின்றானே, அவன் யார்? 
அவன் (அணிந்திருக்கும் மாலை) வாழ்க! அவன் மாலை அணிந்திருக்கிறான்; ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! 

பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்றுதான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! 
வரிசை வரிசையாக வெகுண்டு வந்த புதுப்புது வீரர்களைக் கண்டு அவன் வியக்கவும் இல்லை; 
அவர்களை இழிவு படுத்தவும் இல்லை. அவர்களை இறுகப் பிடித்து, அகன்ற ஆகாயத்தில் 
ஒலி எழுமாறுஅவர்களது உடலைக் கவிழ்த்து நிலத்தில் படுமாறு வீழ்த்தி அழித்ததை நினைத்து மகிழவும் இல்லை; 
தன் செயலை நினைத்துப் பெருமிதமும் அடையவில்லையே!



Description:(A Song About Thalaiyaalangkaanaththu Seruvendra Paandiyan Nedunjchezhiyan)
Who is the young brave man who has removed kinkini and has worn shining kazhal? 
He has worn the tender leaves of the neem tree together with uzhingai flowers on the hair removed head. 
He stands on the chariot making it beautiful. He has a bow in his hand from which the bangles are removed. 

Who ever he may be, let him live long. He has worn kanni on his head and garland on his chest. 
He has not removed the thaali. He has not drink milk and has taken food today only. 

Though he is so young, he does not afraid or wonder on seeing the enemies who come continuously. 
He does not feel happy on catching and killing them so that their crying sound echoes in the sky. 

He does not feel proud also. -Idaikkundroor Kizhaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/05/77.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Monday, April 11, 2016

புறநானூறு - 76. அதுதான் புதுமை!

புறநானூறு - 76. அதுதான் புதுமை!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை :வாகை. 
துறை: அரச வாகை. 

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரள்அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்

நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்

பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!


பொருளுரை:

ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; 
அது இவ்வுலகத்து இயற்கை. ஊர்ப்பொதுவில் உள்ள திரண்ட அடிப்பாகத்தை உடைய வேப்ப மரத்தின் 
பெரிய கிளையின் ஓளி பொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் கலந்து 
நெருக்கமாகத் தொடுத்த தேன் மிக்க மாலையை வளைய மாலையுடன் சிறப்பாகச் சூடி, 
இனிய போர்ப்பறை ஒலிக்கக் கண்ணுக்கு இனிய பசும்பொன்னாலான அணிகலன்களை அணிந்த நெடுஞ்செழியனின் 
செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், 

கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு 
தான் ஒருவனாக நின்று போர்க்களத்தில் அவர்களை அழித்ததை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை




Description:(A Song About Thalaiyaalangkaanaththu Seruvendra Paandiyan Nedunjchezhiyan)
It is not new but it is nature one killing another and one running away from another being defeated. 
But it is new to the world that Paandiyan Nedunjchezhiyan who has worn the leaves 
of the neem tree together with uzhingai flowers stood alone and 
defeated Seran, Sozhan and five Velirs who came to fight with him not knowing his strength. 
It is a wonder which we do not hear. -Idaikkundroor Kizhaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/04/puranaanuuru-poem-74.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Saturday, April 9, 2016

புறநானூறு - 74. வேந்தனின் உள்ளம்

புறநானூறு - 74. வேந்தனின் உள்ளம்

பாடியவன்: சேரமான் கணைக்கா லிரும்பொறை
திணை: பொதுவியல் 
துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய
தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர் 


குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?


பொருளுரை:

எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் 
அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். 

ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, 
என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் 
அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! 
இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?


Description:(A Song Written By Seran Kanaikkal Irumporai)
If the child born dead , or if the baby which is not matured and which has no shape born, 
the braves cut them with sword and then only bury. 

Being dragged with chains, like a dog, by the enemies, it is shame to drink the water and quench the thirst. 
If one person does this without will power, no one will wish to give birth to such a person.   

முலம்:
http://puram400.blogspot.in/2009/04/puranaanuuru-poem-74.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html



Friday, April 8, 2016

புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!

புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!

பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம்.
திணை: காஞ்சி 
துறை: வஞ்சினக் காஞ்சி 

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து

ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்

கழைதின் யானைக் கால்அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்றுஅவண்

வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே!

பொருளுரை:

மெல்ல வந்து என் காலில் விழுந்து “கொடு” என்று என்னைக் கெஞ்சிக் கேட்டால் புகழுடைய 
முரசோடு கூடிய என்னுடைய உரிமைச் சொத்தாகிய இந்நாட்டை அடைவது எளிது. 

அது மட்டுமல்லாமல், என் இனிய உயிரைக்கூடக் கொடுப்பேன். 
ஆனால், வெட்ட வெளியில் படுத்துறங்கும் புலிமேல் தடுக்கி விழுந்த குருடன் போல் இந்நாட்டு மக்களின் ஆற்றலைப் போற்றாது 
போருக்கு வந்து என்னை ஏளனப்படுத்தும் அறிவிலி நெடுங்கிள்ளி இங்கிருந்து தப்பிப்போவது அரிது. 

மூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் குத்திய வலிய பெரிய நீண்ட முள்போல் அவனைத் துன்புறுத்திப் போரிடேனாயின், 
தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத மிகுந்த கரிய கூந்தலையுடைய மகளிர் (விலை மகளிர்) 
என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்


Description:(A Song Written By Sozhan Nalangkilli)

If the enemies come slowly, touch my feet and beg, 
I will easily give my kingdom which has a great murasu. 

I will even give my sweet life. 
Due to their strength , if they insult my strength they cannot escape from me like the blind who stuck the sleeping tiger. 
Like the bamboo which is under the feet of the elephant is got crushed, I will destroy them. 
If I do not do this , let my garland be on the body of the lady who does not have real love.

முலம்:
http://puram400.blogspot.in/2009/04/puranaanuuru-poem-73.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html