Saturday, March 26, 2016

புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!

 
புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!

பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை : பூவைநிலை.

ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி!
வல்லை மன்ற நீநயந் தளித்தல்!
தேற்றாய் பெரும! பொய்யே; என்றும்

காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே.

மாலை தவழும் அழகு மிகுந்த மார்பையும்,
முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கையையும் உடைய மாட்சிமைக்குரிய வழுதி!

பொருளுரை:

நீ யாவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் உண்மையாகவே வல்லவன்.
நீ என்றும் பொய்யே கூறமாட்டய். உன் பகைவர்க்கு,
நீ என்றும் கடும் வெப்பம் நீங்காமல் கடலிடத்தே இருந்து கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன். எம்போன்றவர்களுக்கு,
நீ குளிர்ந்த திங்களைப் போன்றவன்.

Description: (A Song About Siththira Maadaththu Thunjchiya Nanmaaran)

Oh Paandiyaa king having beautiful chest with long pearl garlands
and long hands which touch the knees !

You are so strong in showing kindness.
You never know to speak lie.
You are like the hot sun which rises fron the sea to your enemies,
but you are like the cold moon to the poets like us.

-Madhurai Koolavaanihan Seeththalai Saaththanaar


முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-56-to-60-english.html

No comments: