Sunday, March 6, 2016

புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!

புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!

பாடியவர்: இடைக்காடனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : வாகை. 
துறை: அரச வாகை.
சிறப்பு : சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும்.

ஆனா வீகை யடுபோ ரண்ணனின் 
யானையு மலையிற் றோன்றும் பெருமநின் 
தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை 
வேலு மின்னின் விளங்கு முலகத் 
தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற் 

புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே 
தண்புனற் பூச லல்லது நொந்து 
களைக வாழி வளவ வென்றுநின் 
முனைதரு பூசல் கனவினு மறியாது 
புலிபுறங் காக்குங் குருளை போல 

மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப் 
பெருவிறல் யாணர்த் தாகி யரிநர் 
கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர் 
படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர் 
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை  

நீர்தரு மகளிர் குற்ற குவளையும் 
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தமரும் 
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந 
மலையி னிழிந்து மாக்கட னோக்கி 
நிலவரை யிழிதரும் பல்யாறு போலப் 

புலவ ரெல்லா நின்னோக் கினரே 
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக் 
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு 
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. 

பொருளுரை:

ஆசிரியர் இடைக்காடனார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் மற்ற 
இரு வேந்தர் நாடுகளைக் கவரும் கருத்தினனாய் வலிமையோடு விருப்புற்று, 
மலை போன்ற யானையும், கடல் போலும் தானையும் கொண்டு, 
புலி தன் குருளையைக் காப்பது போலத் தன்னாட்டைக் காப்பதையும், அவனது விருந்து புறந்தரும் அறத்தையும் இப்பாட்டில், 

“அளவில்லாத வள்ளன்மையும், பகையை வெல்லும் போரினையும் செய்யும் பெருமைக்கு உரியோனே! 
உனது யானையும் மலை போலத் தோன்றும் பெருமானே! 

குளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் சலசலப்பைத் தவிர வருந்தி,
எங்கள் துயரத்தைத் தீர்ப்பாயாக வளவனே! 
நீ வாழ்க என்று சொல்லி நீ வழிநடத்திச் செல்லும் படையுண்டாக்கும் சலசலப்பை கனவிலும் கருதாமல் 
புலி பாதுகாக்கும் குட்டி போல குறையற்ற செம்மையான ஆட்சி செலுத்தி 
நீ மக்களைக் பாதுகாப்பதோடு பெருஞ்சிறப்புடன் புது வருவாயை உடையவன் நீ! 

நெல்லறுப்பார் கடைமடையில் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும், 
உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமையும், கரும்பு அறுப்போர்
 கரும்பிலிருந்து எடுத்த இனிய கரும்புத்தேன் சாறும், 
பெரிய நீர்த்துறையிலிருந்து நீர் முகர்ந்து கொண்டுவரும் மகளிர் பறித்த 
குவளை மலர்களும் குறிஞ்சி முல்லையாகிய வன்புலத்திலிருந்து வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும் 
மருதமும் நெய்தலுமாகிய மென்புலத்து ஊர்களையுடைய நல்ல நாட்டின் வேந்தனே! 

மலையிலிருந்து இறங்கி வழிந்தோடி பெரிய கடலை நோக்கி நிலஎல்லை வரை வளம் தரும் பல ஆறுகளைப் போல 
புலவர் யாவரும் உன்னையே நோக்கினர். 

உன் படையும் கடல்போல ஆர்ப்பரிக்கும். கூரிய நுனியினையுடைய வேலும் மின்னல் போலப் பளிச்சிடும். 
இவ்வாறு உலகத்திலுள்ள வேந்தர்களின் தலை நடுங்குவதற்கு ஏதுவாகிய வலிமை உடையவனாதலால், 
நீதான் அவர்க்குப் பரிசில் கொடுத்தற் பொருட்டு, மருந்தில்லாத கணிச்சி (மழு) என்ற போர்க்கருவியை உயிர் வருந்த சுழற்றும், 
கூற்றம் சினந்தது போன்ற வலிமையுடன், உனக்கு மாறுபட்ட சேரன், பாண்டியன் ஆகிய இரு வேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய்.
 உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. அது உனக்குப் புதியது அல்ல” என்று பாராட்டுகிறார். 


Description:(A Song About Sozhan Killivalavan)
Oh king having patronage which cannot be measured and strength to win fearful wars ! 
Your elephants look like mountains. 
Your armies roar like seas. 
Your sharp vel shines like the lightning. 
You are so powerful so that the enemies obey and worship you. 

Removing our sorrow is not new to you. It belongs to the family in which you born. 
You hear only the falling sound of the water falls. 
You never hear the sorrowful voice of the beggars even in your dream. 

Like the tiger guards its cubs, you save and rule your people. 
Your country has new income which brings fame to you. 

The vaalai fish which is caught by the reapers, the tortoise caught by the farmers,
the honey which is gathered by the sugarcane cutters and the kuvalai flowers 
which are brought by the ladies who went for fetching water a
re given to the guests from Kurinji and Mullai by the hosts of Marudham and Neidhal. 

Oh lord belonging to such a town! Like the rivers that born on the mountains run towards the sea, 
the poets who wish to get gifts come to you only. 

In order to give them the gifts, 
you started with kanichchi like the angry Yamaa to capture 
the lands of Seraa and Paandiyaa who oppose you. 

Oh Valavaa! You live long. -Idaikkadanaar


No comments: