Saturday, March 5, 2016

புறநானூறு - 41. காலனுக்கு மேலோன்!

இப்பாட்டில் ஆசிரியர் கோவூர் கிழார், 
“எமனும் ஓர் உயிரைக் கொண்டு செல்ல தகுந்த நேரம் காலம் வரும் வரையில் பார்த்துக் காத்திருப்பான்! 
அவ்வாறு காலம் பார்க்காமல் வேலைத் தாங்கிய பகைவர்களின் படையை அழிக்க, வேண்டிய இடத்தில் கொன்று 
வெற்றியை அடையக்கூடிய போர் செய்யும் வேந்தே! 


புறநானூறு - 41. காலனுக்கு மேலோன்!

பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி. 
துறை: கொற்ற வள்ளை. 

காலனுங் காலம் பார்க்கும் பாராது 
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய 
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே 
திசையிரு நான்கு முற்க முற்கவும் 
பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும் 

வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும் 
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும் 
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும் 
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும் 
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் 

கனவி னரியன காணா நனவிற் 
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி 
மையல் கொண்ட வேமமி லிருக்கையர் 
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட் 
கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு 

பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ 
டெரிநிகழ்ந் தன்ன செலவிற் 
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே. 

பொருளுரை:
இப்பாட்டில் ஆசிரியர் கோவூர் கிழார், 
“எமனும் ஓர் உயிரைக் கொண்டு செல்ல தகுந்த நேரம் காலம் வரும் வரையில் பார்த்துக் காத்திருப்பான்! 
அவ்வாறு காலம் பார்க்காமல் வேலைத் தாங்கிய பகைவர்களின் படையை அழிக்க, வேண்டிய இடத்தில் கொன்று 
வெற்றியை அடையக்கூடிய போர் செய்யும் வேந்தே! 

உன்னைச் சினப்பித்தோர் நாட்டு மக்கள் எட்டுத் திசையும் எரி கொள்ளி எரிந்து விழவும், 
பெரிய மரங்களின் இலைகளில்லாத நீண்ட கிளைகள் காய்ந்து பட்டுப் போகவும், வெப்பக் கதிர்களை உடைய கதிரவன் கடுமையாக வெப்பத்தைப் பரப்பவும், 
மற்றும் அஞ்சத்தகுந்த காலநிலைகளை யும், 
பிற இன்னல்களின் வரவையும் அறியும் தன்மையுடைய பறவையினங்கள் கூச்சலிட்டுக் குரலிசைக்கவும் நனவில் காண்கின்றனர். 

பற்கள் நிலத்தில் உதிர்ந்து விழுவது போலவும், 
எண்ணெயைத் தலையில் தேய்த்து குளிப்பது போலவும், பெண்பன்றி ஆண்பன்றி மேல் தழுவுவது போலவும், 
ஆடையைக் களைவது போலவும், வெண்மையான வலிய படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும் 
கனவினிலும் காண்பதற்கு அரிதான தீமையான செயல்களை அவர்கள் காண்கின்றனர். 
நனவிலும் அத்தகைய கடுமையான போர் செய்யும் வலிமை யுடையோய்! 

காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும் போரில் சிறந்த வளவனே!
நீ இத்தன்மை உடையவன் ஆதலால், ’உன்னைச் சினப்பித்தோர் நாட்டு மக்கள், 
நீ படையெடுத்து வரும் உனது வலிமையை எண்ணி கலங்கி காவல் இல்லாது இருப்பவர்களாய் 
தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு தம் மனைவியர்க்குத் தமது வருத்தம் தெரியாதவாறு 
மறைக்கும் துன்பத்தை யுடைய ஆடவர்களாய் மிக கலக்கமுற்று இருக்கி றார்கள்” 
என்று கொற்றவள்ளை பாடிக் கிள்ளி வளவனைச் சிறப்பிக்கின்றார். 


Description:( A Song About Sozhan Kulamuttraththuth Thunjchiya Killivalavan)

Even Yamaa who kills the lives awaits for the proper time. 
But you have the strength to kill warriors who have vels, whenever you wish. 

You have the strength to fight with your enemies so that they see forebodes 
which are fearful to see in the dreams like meteorites fall on all eight directions, 
green trees becoming dry logs,the sun with hot rays appear in many directions, 
birds making awful sounds, teeth falling on the ground, others pouring oil on the heads, 
riding on the pigs, removal of dresses and the cot on which shining , 
strong weapons were kept falling broken. 

In the countries in which you invade, the warriors afraid on seeing your strength. 
In order to hide their fear and sorrow from their ladies, they kiss their children. 
The countries of your enemies will be spoiled like the forest surrounded by fire and wind. 
-Kovoorkkizhaar


No comments: