Friday, February 26, 2016

புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!

புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!

பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை:வாகை. 
துறை: அரசவாகை.
சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி. 

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் 
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள் 
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய 
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர் 
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 

முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும் 
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் 
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின் 
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை 
பாடுநர் வஞ்சி பாடப் படையோர் 

தாதெரு மறுகிற் பாசறை பொலியப் 
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த 
மலரா மாலைப் பந்துகண் டன்ன 
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும் 
செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை 

வல்லோன் றைஇய வரிவனப் புற்ற 
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக் 
காம விருவ ரல்லதி யாமத்துத் 
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின் 
ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி 

பொருளுரை: 

வேந்தே! காட்டில் தங்கி வாழும் சினம் மிக்க வேட்டை நாய்களை உடைய வேடன் மான் தசைகள் வைக்கப்பட்ட ஓலையால் புனைந்த பெட்டியும், 
இடைச்சியர் குடம் நிறைய கொண்டு வந்த தயிரும் ஏரால் உழுதுண்டு வாழும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர் பெற்றுக் கொண்டு, குளத்தின் கீழுள்ள வயல்களில் விளைந்து, 
வேறிடத்தே அமைத்த களத்தில் தொகுத்து, வைக்கோலும் பதரும் களைந்த தூய்மையான நெல்லை முகந்து எடுத்துக் கொடுப்பர். 

வேடரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்ற ஊர் தென் திசையில் பொதிகைமலை உள்ள பாண்டியனது நல்ல நாட்டில் உள்ளது. 
அங்கு அமைந்த ஏழு அரண்களின் கதவுகளை அழித்துக் கைப்பற்றி பெரிய வாயை உடைய உனது புலியைப் பொறிக்கும் வலிமையை உடையவன் நீ! 

உன்னைப் பாடும் புலவர்கள் நீ பகைவருடைய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றதைப் புகழ்ந்து பாட, 
உன் படைவீரர்கள் பூந்தாதுக்கள் பரவியுள்ள தெருக்களில் அமைந்த பாசறைகள் பொலிவு பெற, 
உலராத பசுமையான இலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட மலராத முல்லை அரும்பு களாற் தொடுத்த மாலையின் பூப்பந்தைப் 
காண்பது போன்ற தசைகளோடு கூடிய பெருஞ்சோற்றுத் திரளையை பாணர்களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கிறார்கள். 
அத்தகைய சிறப்புடையது உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம். 

கைவல்லுனர்களால் புனைந்து செய்தும் வரையப்படும் அழகு பொருந்திய அல்லிப் பாவை அல்லியம் என்னும் கூத்தை 
ஆடும் அழகை ஒப்ப அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாக இருவராக அல்லாமல் நள்ளிரவில்
தனியாக ஆண்மகன் ஒருவன் செல்வதில்லை. 

அத்தகைய குளிர்ந்த மலர்களையுடைய பூஞ்சோலையின் செல்வதற்கு இனிய செறிந்த மணலையும், 
புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் மண்டபங்கள் தோறும் செம்மறி யாடுகளை அறுத்து உண்டு, 
அல்லிப்பாவைகள் ஆடும் விழாக்கள் கொண்டாடுகிறார்கள். பாணர் களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கும் 
உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம் நீ எடுத்துக் கொண்ட விழாக்கள் பலவினும் சிறப்புடையது
 
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப 
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே

Description:( A Song About Sozhan Nalangkilli)

The hunters who live in the forest and who have hound give basket full of deer flesh. 
The shepherds give potful of curd. The farmers' houses are filled with deer flesh and curd. 
The ladies in the farmers' houses fill up the baskets of the hunters and the pots of the shepherds with white paddy which grow on the banks of the pond. 
The hunters and shepherds take them happily. 
You are strong enough to invade the fertile Paandiyaa country, destroy the seven forts and security. 
You are strong enough to engrave your big mouthed tiger symbol there. 

So poets are praising you. 
Your war camps surrounded by the bulls and are near to the common place where the shepherd ladies dance kuravai dance. 
There the rice balls with the flesh which look like the garland made up of the buds of Mullai with fresh leaves are received by the Paanaas with desire. 
The ladies and gents resemble the dancing allippavaies done by the artisan go through the beautiful parks. 
No one go there single. The dinner festivals celebrated by you in the storeys by killing sheep is very fine. 
-Kovoorkkizhaar



1 comment:

Heenastyle USA said...

Buy Designer Lehengas, Bollywood, Wedding Lehenga Choli Online in India. Shop Latest Collection of Lehenga Design at Heena Style. Shop Lehenga Cholis online at Heenastyle.com. Browse range of designer Lehenga Cholis, colors, size, lehenga. http://www.heenastyle.com/lehengas